Sunday, May 04 11:55 am

Breaking News

Trending News :

no image

5 மாநிலங்களிலும் சட்டசபை வாக்குப்பதிவில் திடீர் திருப்பம்…! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம்


டெல்லி: 5 மாநிலங்களிலும் சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு 1 மணி நேரம் கூடுதலாக்கப்படுவதாக தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இதை அறிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது: கொரோனா காலம் என்பதால் அதிக முன் எச்சரிக்கையுடன் தேர்தல் நடத்துகிறோம். கொரோனா அச்சுறுத்தல் இருந்தாலும் சுகாதாரத்துறை மூலமாக சமாளித்து வருகின்றோம்.

தேர்தல் பணிகளில் ஈடுபட்டு, அதனை சுமூகமாக நடத்துவதில் மருத்துவர்கள்,செவிலியர்கள், சுகாதாரை பணி தலையானது. தேர்தல நன்னடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.

பீகார் தேர்தலில் முநதைய தேர்தலைவிட அதிகளவாக 57 சதவிதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. நாடு முழுவதும் மொத்தம் 824 தொகுதிகளில் தேர்தல் நடத்தப்படுகின்றன. 18.68 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

5 மாநிலங்களிலும் 2.7 லட்சம் வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடக்கிறது. ஒரு வாக்குச்சாவடியில் 1000 வாக்காளர்கள் மட்டுமே வாக்களிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில் 88,936 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன.

கடந்த முறையை விட இப்போது 34.73 சதவீதம் அதிக வாக்குபதிவு மையங்கள் அமைக்கப்படுகின்றன. அனைத்து வாக்குப்பதிவு மையங்களும் தரைத்தளத்தில் தான் அமைக்கப்படும்.

வாக்காளர்களின் பாதுகாப்பு என்பது மிக முக்கியமான ஒன்று என்று தேர்தல் ஆணையம் கருதுகிறது. கொரோனா அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு வாக்குப்பதிவு 5 மாநிலங்களிலும் ஒரு மணி நேரம் அதிகரிக்கப்படுகிறது.

 

 

Most Popular