ஐஐடி குசும்பு…! நாய் பராமரிப்பாளர் பணிக்கு பட்டதாரிகள் வேண்டுமாம்…!
டெல்லி: நாயை பராமரிக்கும் வேலைக்கு பட்டதாரிகள் தேவை என்று ஐஐடி நிறுவனத்தின் விளம்பரம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லி ஐ.ஐ.டி. கல்வி மையம் மீது இப்போது ஒரு பெரும் சர்ச்சை வெடித்து இருக்கிறது. ஆகஸ்டு 26ம் தேதி ஒரு வேலைவாய்ப்பு விளம்பர அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அந்த விளம்பரத்தில் பி.ஏ., பி.எஸ்சி, பி.காம், பி.டெக் மற்றும் அதற்கு இணையான டிகிரி படித்தவர்கள், நாய் பராமரிப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த விளம்பரம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவ, பெரும் கண்டனங்கள் எழுந்தன.
வேலையில்லா பட்டதாரிகளை நாய் பராமரிப்பு வேலைக்கு அழைப்பதா? என்று கடும் விமர்சனங்கள் எழுந்தன. ஒட்டு மொத்தமாக கடும் எதிர்ப்பு வலுத்ததால் ஐ.ஐ.டி. நிர்வாகம் விளக்கம் அளித்து, அந்த விளம்பரத்தையும் வாபஸ் பெறுவதாக அறிவித்து உள்ளது.