இன்றைய TOP 10 News…!
தேசிய அளவிலும், தமிழகத்திலும் இன்றைய தினத்தின் TOP 10 செய்திகளை பார்க்கலாம்:
அயோத்தியில் புதியதாக கட்டப்பட்டு உள்ள விமான நிலையத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்.
பிரபலமான சபரிமலை அய்யப்பன் கோவிலில் மகரபூஜை தரிசனத்துக்காக நடை இன்று திறக்கப்படுகிறது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையின் எதிரொலியாக 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் 15வது வார்டு தேமுதிக துணை செயலாளர் மோகன் என்பவர் விஜயகாந்த் மறைவை தாங்காமல் மாரடைப்பால் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் 2024ம் ஆண்டு முதல் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் என்று தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கனமழையின் காரணமாக தாமிரபரணி ஆற்றில் திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
புதுக்கோட்டை அருகே கட்டுப்பாட்டை இழந்த சரக்கு லாரி, டீக்கடைக்குள் புகுந்ததில் 5 பேர் உடல் நசுங்கி பலியாகினர்.
588வது நாளாக சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் எவ்வித மாற்றமும் இன்றி 102.63 ரூபாய்க்கும், டீசல் 94.24 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
மியான்மரில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம் மக்களிடையே பீதியை ஏற்படுத்தி இருக்கிறது. ரிக்டர் அளவுகோலில் 4.6 என்று பதிவான நில அதிர்வால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தகவல்கள் வெளியிடப்படவில்லை.
இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட்டில் இருந்து தென்னாப்பிரிக்க அணி கேப்டன் பவுமா காயம் காரணமாக விலகி உள்ளார்.