புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு… ! தொண்டர்களுக்கு திடீர் சர்ப்ரைஸ்…
புதுச்சேரி: புதுச்சேரியில் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 12 வேட்பாளர்களுக்கான பட்டியலை திமுக அறிவித்துள்ளது.
அதன்படி, உருளையன்பேட்டையில் கோபாலும், உப்பளம் தொகுதியில் அனிபால்கென்னடியும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர். மங்கலம் தொகுதிக்கு சன்குமரவேல், முதலியார் பேட்டைக்கு சம்பத், வில்லியனூர் தொகுதிக்கு சிவா, நெல்லித்தோப்பு தொகுதிக்கு கார்த்திகேயன் ஆகியோர் வேட்பாளர்களாக களம் இறங்கி உள்ளனர்.
ராஜ்பவன் தொகுதிக்கு சிவக்குமார், மண்ணாடிப்பட்டு தொகுதிக்கு கிருஷ்ணன் என்கிற ஏகே குமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். காலாப்பட்டுக்கு முத்துவேல், திருப்புவனைக்கு முகிலன், காரைக்கால் தெற்கு தொகுதிக்கு நாஜிம், திரவி திருப்பட்டினம் தொகுதிக்கு நாகதியாகராஜன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.