பிளானே வேற…! ரூட்டை மாற்றிய சசிகலா..! தொண்டர்கள் குஷி
சென்னை: அதிமுக எல்லாருக்குமான இயக்கம், எல்லாம் விரைவில் சரியாகி விடும் என்று கூறியிருக்கும் சசிகலாவை கண்டு அதிமுகவினர் குஷியாகி இருக்கின்றனர்.
சென்னையில் அரசியலில் மூத்த தலைவர், முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரனை அவரது இல்லம் தேடி சென்று சந்தித்தார் சசிகலா. அதிமுக உட்கட்சி பூசல், தற்போதைய அரசியல் நிலைமைகள், வரும் நாடாளுமன்ற தேர்தல் உள்ளிட்டவை குறித்து பேசப்பட்டதாக தெரிகிறது.
அதன் பின்னர் செய்தியாளர்களை சசிகலா சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: அதிமுக யாரோ ஒருவரின் சொத்து அல்ல… அது ஒரு இயக்கம். இந்த இயக்கம் எல்லாருக்குமானது. தொண்டர்களின் கட்சியாக 50 ஆண்டுகளாக இருக்கிறது.
அனைவரும் ஒன்றாக இணைந்து பயணிக்க வேண்டும் என்பது எனது ஆசை. எம்ஜிஆர் அதிமுகவை ஆதரிக்கும் போது சாதி, மதம் பார்த்தது இல்லை. அந்த கொள்கை இன்றும் பின்பற்றப்படுகிறது. காலபோக்கில் அனைத்து பிரச்னைகளும் சரியாகிவிடும் என்று நம்புகிறேன். நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக அதிமுக ஒன்றாக இணையும் என்று தெரிவித்தார்.
வழக்கமாக அவரது பேட்டியையும், பண்ருட்டி ராமச்சந்திரன் சந்திப்பை தொடர்ந்து அவர் அளித்த பேட்டியையும் உற்றுநோக்கி இருக்கும் அரசியல் நிபுணர்கள் ஆச்சரியம் அடைந்திருக்கின்றனர். கேள்விக்கான பதிலை சொல்லும் போது நிதானம், தெளிவு, உறுதி ஆகியவற்றை பார்க்க முடிந்தது என்று கூறுகின்றனர்.
பார்லிமெண்ட் தேர்தலுக்கு முன்பாக அதிமுக இணையும் என்று அவர் கூறியதை சுட்டிக்காட்டும் அவர்கள், மிக பெரிய பிளானுடன் சசிகலா இறங்கி இருக்கிறார் என்பது இதில் தோன்றுகிறது என்று தெரிவிக்கின்றனர். அதன் தொடக்கம் தான் பண்ருட்டி ராமச்சந்திரன் சந்திப்பு.
இதுபோல இனி அடுத்தடுத்த அரசியல் நகர்வுகள் வேகம் பெறும், அப்போது எடப்பாடி பழனிசாமிக்கு எதிரானவர்கள் பலரும் தம்மை நோக்கி நகர்வார்கள், அதன் தொடக்கம் தான் அவரின் இந்த பேட்டி என்றும் கூறி உள்ளனர். இனி முன் எப்போதும் இல்லாத அளவுக்கு சசிகலாவின் அரசியல் நகர்வுகள் இருக்கும் என்றும் விரைவில் அதிமுகவில் உள்ள முக்கிய தலைகள் சசிகலாவை நேரடியாகவே சந்திக்க உள்ளனர் என்றும் தெரிவித்துள்ளனர்.