வரும் 26ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு…! வெளியானது அதிரடி அறிவிப்பு
அகமதாபாத்: கொரோனா பரவல் குறைந்துவிட்டதால் வரும் 26ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுவதாக குஜராத் மாநிலம் அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்று காரணமாக மக்கள் வாழ்க்கை ஒட்டு மொத்தமாக பாதிக்கப்பட்டது. பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்கள் மூடப்பட்டன.
கொரோனா பரவல் ஓயாததால் கல்வி நிலையங்கள் எப்போது திறக்கப்படும் என்று தெரியாத நிலை எழுந்துள்ளது. தற்போது கொரோனா தொற்றுகளின் பாதிப்பு பெரும்பாலான மாநிலங்களில் குறைந்துவிட்டதால் ஊரங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.
கடைகள், வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் அனைத்தும் அண்மையில் திறக்கப்பட்டன. ஆனால் கல்வி நிலையங்கள் திறக்கும் மாநிலத்துக்கு மாநிலம் வேறுபாடு காணப்பட்டது.
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு என்பது இப்போதைக்கு சாத்தியம் இல்லை என்று தமிழக அரசு திட்டவட்டமாக கூறிவிட்டது. இந் நிலையில் குஜராத் மாநிலத்தில் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் வரும் 26ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்காக வகுப்புகள் திறக்கப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. அரசின் இந்த அறிவிப்பால் பள்ளி மாணவர்களும், பெற்றோர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.