என்னது..? நான் செத்துவிட்டேனா..? கதறும் தேசிய விருது நடிகை
தாம் செத்துவிட்டேன் என்று வரும் தகவல்களில் உண்மையில்லை…. நான் உயிரோடு தான் இருக்கும் என்று பிரபல நடிகை சாரதா கூறி இருக்கிறார்.
தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் மிகவும் பிரபலமான, பழம்பெரும் நடிகை சாரதா. 30 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் வலம் வந்தவர்.
சூப்பர் ஸ்டார் ரஜினியின் மிஸ்டர் பாரத் படத்தில் அவருக்கு தாயாக நடித்தவர். சிறந்த நடிகை என்று தேசிய விருதும் பெற்றவர். இவரை பற்றி சில நாட்களாக ஒரு செய்தி திரை உலகில் தீயாய் பரவி வருகிறது. அவர் இறந்துவிட்டார், உடல்நலம் சரியில்லாமல் காலமாகி விட்டார் என்று தகவல்கள் வெளியாகின.
இதை அனைத்தையும் கேள்விப்பட்ட அவர், கொதித்து போய் உள்ளார். பலரும் அவரை பற்றி அவருக்கே போன் செய்து விசாரித்த ஒரு கட்டத்தில் கடும் அதிருப்தி அடைந்த சாரதா, தாம் உயிரோடு இருப்பதாக அறிவித்து இருக்கிறார்.
என் உடலில் எந்த நோயும் இல்லை… ஆரோக்கியமாக இருக்கிறேன், கீழ்த்தரமான இதுபோன்ற வதந்தி பரப்பும் நடவடிக்கைகளில் இறங்காதீர்கள், நான் நன்றாக உள்ளேன் என்று நடிகை சாரதாக கூறி உள்ளார்.