BEAST…. நடிகர் விஜய்க்கு 6வது படமா…? வெளியான சுவாரசிய தகவல்
சென்னை: ஆங்கிலத்தில் டைட்டில் வைக்கப்பட்ட தளபதி விஜய்யின் 6வது படம் பீஸ்ட் என்ற சுவாரசிய தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் திரையுலகில் யாருக்கும் சந்தேகமே கிடையாது.. விஜய் ஒரு முன்னணி நடிகர் என்பது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கவர்ந்த நாயகன். அவர் இப்போது தளபதி 65 படத்தில் நடித்து வருகிறது. படத்தின் இயக்குநர் நெல்சன், கதாநாயகி பூஜா ஹெக்டே.
இவை அனைத்தும் ஏற்கனவே அறிந்த தகவல்கள் தான். தளபதி 65 என்று பெயரிடப்படாத இந்த படத்துக்கு பீஸ்ட் என்று ஆங்கிலத்தில் பெயர் வைக்கப்பட்டு உள்ளது. நாளை விஜய் பிறந்த நாள்… அதை கொண்டாடும் வகையில் இன்று மாலை 6 மணிக்கு படத்தின் பர்ஸ்ட் லுக் கலக்கலாக ரிலீசாகி ரசிகர்களை சிலிர்க்க வைத்துள்ளது.
அதே நேரத்தில் படம் பற்றிய சுவாரசிய விஷயங்களும் வெளியாகி கொண்டே இருக்கின்றன. அதில் ஆச்சர்யப்படும் விஷயம்… நடிகர் விஜய்க்கு பீஸ்ட் படம் 6வது படம்
என்ன… ஆச்சரியமாக இருக்கிறதா..? விஷயம் இதுதான்.. விஜய்யின் படங்களுக்கு ஆங்கிலத்திலும் டைட்டில் வைக்கப்பட்டு உள்ளது. லவ் டுடே, ஒன்ஸ்மோர், ப்ரெண்ட்ஸ், யூத், மாஸ்டர் ஆகியவையே அதற்கு உதாரணம்.
இப்போது, பீஸ்ட் என்று அவரின் புதிய படத்துக்கு பெயர் வைக்கப்பட்டு உள்ளது. ஆங்கில டைட்டிலுடன் வைக்கப்பட்டு உள்ள 6வது படம் தான் பீஸ்ட். என்ன வேணாலும் சொல்லிக் கொள்ளுங்கள்… எங்களுக்கு விஜய் முக்கியம், பீஸ்ட் முக்கியம் என்று குதூகலத்தில் இருக்கின்றனர் அவரது ரசிகர்கள்…!