Sunday, May 04 12:36 pm

Breaking News

Trending News :

no image

UPI பயன்படுத்தினா பாக்கெட் காலி…! ஷாக் தரும் செய்தி


டெல்லி: யுபிஐ பண பரிவர்த்தனை செய்பவர்களுக்கு அதிர்ச்சி தரும் அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.

யுபிஐ அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், அனைவருக்கும் பண பரிவர்த்தனை என்பது மிகவும் எளிதானதாக மாறியது. கடந்தாண்டை விட இந்தாண்டு யுபிஐ பரிவர்த்தனையை பயன்படுத்துவோர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்வது அதற்கு அடையாளர்.

வங்கித்துறையின் மிக பெரிய வரப்பிரசாதம் என்பதில் எந்த ஐயமும் இல்லை என்றாலும் தற்போது அது பற்றிய அதிர்ச்சி தரும் அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது வரும் 1ம் தேதி முதல் யுபிஐ wallet transaction பண்ணினால் இனி கூடுதல் பணம் கட்ட வேண்டும்.

இதற்கான அறிவிப்பை NPCI சுற்றறிக்கை மூலம் வெளியிட்டு உள்ளது. 2000 ரூபாய்க்கு அதிகமான பணப்பரிவர்த்தனைகளை யுபிஐ மூலம் பயன்படுத்தினால் கூடுதல் பணம் செலுத்த வேண்டும். அதாவது பரிவர்ததனை மதிப்பில் 1.1 சதவீதம் பரிமாற்ற கட்டணம் செலுத்த வேண்டும் என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 

எரிபொருளுக்கு 0.5 சதவீதம்

 

தொலைத்தொடர்பு, பயன்பாடுகள், அஞ்சல் அலுவலகம், கல்வி, விவசாயம் ஆகியவற்றுக்கு 0.9 சதவீதம்,

 

பல்பொருள் அங்காடிக்கு 0.9 சதவீதம்

 

பரஸ்பர நிதிக்கு, அரசாங்கம், காப்பீடு மற்றும் ரயில்வே 1 சதவீதம் செலுத்த வேண்டும் என்று சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Most Popular