இன்றைய TOP 10 News…!
தேசிய அளவிலும், தமிழகத்திலும் இன்றைய TOP 10 முக்கிய செய்திகளை பார்க்கலாம்:
பிரான்ஸ் நாட்டில் 303 இந்தியர்களுடன் தரையிறக்கப்பட்ட பயணிகள் விமானம் மீண்டும் புறப்பட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
இயேசு கிறிஸ்துவின் போதனைகள் எப்போதும நமது வாழ்க்கைக்கு பொருத்தமானவை என்று கூறி குடியரசு தலைவர் முர்மு கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 25ம் தேதியான இன்று உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை வெகு விமர்சையாகவும், உற்சாகமாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது.
கேரளாவில் நடைபெறும் கூட்டணி ஆட்சியில் ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தப்படி அமைச்சர்கள் அகமது தேவர்கோவில், ஆண்டனி ராஜா இருவரும் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். அவர்களுக்கு பதிலாக, ராமசந்திரன் கடனப்பள்ளி, கணேஷ்குமார் ஆகியோர் வரும் 29ம் தேதி புதிய அமைச்சர்களாக பொறுப்பேற்கின்றனர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிராவில் தானே பகுதியில் பெண் உள்ளிட்ட 5 பேருக்கு ஜேஎன் 1 என்ற புதிய வகை கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 வகை பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களின் எண்ணிக்கை 5860 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.
583வது நாளாக சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் எவ்வித மாற்றமும் இன்றி 102.63 ரூபாய்க்கும், டீசல் 94.24 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
இஸ்ரேல் நடத்திய விமான தாக்குதல்களில் இதுவரை 70 பேர் கொல்லப்பட்டு உள்ளதாக ஹமாஸ் தகவல் தெரிவித்துள்ளது.
புரோ கபடி லீக் தொடரில் தமிழ் தலைவாஸ் அணியும், அரியானா ஸ்டீலர்ஸ் அணியும் இன்று களம் காண்கின்றன.