என்னது..? டிசம்பர் 10ல் சென்னைக்கு புயல்..-? திடுக் விவரம்
சென்னை: வரும் 10ம் தேதி சென்னையை மீண்டும் ஒரு புயல் தாக்கக்கூடும் என்ற தகவல் பற்றிய புதிய விவரம் தற்போது வெளியாகி உள்ளது.
தலைநகர் சென்னையை ஜாம் ஆக்கிய மிக்ஜாம் புயலின் தாக்கம் இன்னமும் குறையவில்லை. மழை நின்றுவிட்ட போதிலும் அதனால் ஏற்பட்ட பாதிப்பு முழுமையாக போக்கப்படவில்லை.
குடியிருப்பு வளாகங்கள், சாலைகள் என புறநகர் பகுதிகள் இன்னும் வெள்ளக்காடாகவே காட்சி அளிக்கிறது. புயல், மழையால் மக்கள் பரிதவித்து வரும் அதே வேளையில் புதியதாக ஒரு புயல் சென்னையை தாக்க ரெடியாக இருக்கிறது, வரும் 10ம் தேதி புயல் வருகிறது என்று ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
அப்பப்பா… ஒரு மிக்ஜாம் போதும், மறுபடியும் இன்னொன்றா? என்று மக்கள் பீதியில் இருக்க எது நிஜம் என்பது பற்றி தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் விளக்கம் அளித்து, மக்களை ஆறுதல் படுத்தி உள்ளார்.
அவர் தமது சமூக வலைதள பதிவில் கூறி உள்ளதாவது:
சென்னையை நோக்கி அடுத்த வாரம் புயல் வரும் என்ற வதந்தி அடிப்படை ஆதாரமற்றது. இது போன்ற செய்திகளை நம்ப வேண்டாம்.
10ம் தேதி அரேபியா கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இருக்கலாம், அது இந்திய கடற்கரையை விட்டு நகரும். இதற்கும் சென்னைக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது என்று கூறி இருக்கிறார்.
அவரின் இந்த பதிவை பார்க்கும் பலரும் பிரதீப் ஜானுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர். இன்னும் சிலர், ஊடகங்களில் டிஆர்பி ரேட்டிங்கை ஏற்ற இதுபோன்று புயல் வருகிறது என்ற செய்தியை பகிர்கின்றனர் என்று குற்றம்சாட் இருக்கின்றனர்.