#Vijayakanth சாவிலும் புளுகிய சீமான்…!
விஜயகாந்த் மறைவிலும் வாய் கூசாமல் புளுகி தள்ளியிருக்கிறார் சீமான் என்பதை அறிந்து கேப்டன் ரசிகர்கள் கடுப்பில் இருக்கின்றனர்.
எப்போதும் ஏதேனும் அரசியல் தலைவரை திட்டுவது, ஈழத்தமிழர்களுக்கு கட்சி நடத்துகிறேன், ஏழை வீட்டில் வசிக்கிறேன், அன்பு தம்பிகள் காசில் சோறு திங்குகிறேன், ஈழம் சென்று ஆமைக்கறி தின்னேன் என்று கலர், கலராக ரீல் சுற்றுவார் சீமான்.
இது அனைவருக்கும் தெரிந்த பழங்கதை. இவர் அடிக்கும் இப்படி டூப் கதைகளுக்காக நெட்டிசன்களின் ஆஸ்தான மீம்ஸ் நாயகனாக உள்ளார். ஆனால் விஜயகாந்த் மறைவுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்திவிட்டு சென்றுள்ளார்.
ஆனால் விஜயகாந்த் மறைவை அறிந்து சீமான் தூத்துக்குடியில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் சொன்ன பொய், பூமராங் ஆகி திருப்பி அடிக்க ஆரம்பித்து இருக்கிறது.
விஜயகாந்த் நடித்த தவசி படத்தில் வசனம் நான் எழுதி உள்ளேன், அவரின் குணம் எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று பேசி இருக்கிறார் சீமான். அவர் பேட்டியை கண்டு கொதித்த பலரும், இணையத்தில் கண்டபடி திட்டி பதிவுகள் போட்டு வருகின்றனர்.
தவசி படத்தின் திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கத்தை கையாண்டவர் உதயசங்கர். இது படத்தின் டைட்டில் கார்டிலே இருக்கிறது, சீமானுக்கு நன்றி என்று மட்டும் தான் போடப்பட்ட உள்ளது, ஆனால் வசனம் எழுதியதாக உருட்டி தள்ளுவதாக திட்டி தீர்க்க ஆரம்பித்துள்ளனர்.
படத்தில் விஜயகாந்த் அறிமுக காட்சியே பாட்டாகவும், அதில் டைட்டில் கார்டும் வரும்.. அதில் நன்றி சீமான் என்ற கார்டு மட்டுமே இருக்கிறது, கிட்டத்தட்ட 7 நிமிடம் கடந்து ஓடும் அந்த காட்சியில் திரைக்கதை வசனம் இயக்கம் உதயசங்கர் என்று இருக்கிறது, சீமானின் அடுத்த புளுகு, புளுகாண்டி சீமான் என்று பொளந்து கட்டி வருகின்றனர்.
இதற்கு சீமான் ஆதரவாளர்கள் மறுப்பு தெரிவித்து பதிவிட்டு வந்தாலும், டைட்டில் கார்டில் என்ன உள்ளதோ, அதுதான் நிஜம், அதையும் தாண்டி எதை சொன்னாலும் அது புளுகுதான், பொய்தான் என்று சவுக்கடி கொடுத்து வருகின்றனர்.
கீழ்க்கண்ட இணைய பதிவில் அதையும் குறிப்பிட்டு share செய்தும் வருகின்றனர்.