அதிமுகவில் அடுத்த அதிர்ச்சி..! அதிகாலையில் குறி வைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் வீடு உள்ளிட்ட 49 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் இறங்கி உள்ளனர்.
அதிமுக ஆட்சியின் போது உணவுத்துறை அமைச்சராக பதவி வகித்தவர் காமராஜ். முன்னாள் அமைச்சர்களை குறி வைத்து ரெய்டுகள் நடைபெற்று வரும் நிலையில் தற்போது அதே பட்டியலில் காமராஜ் பெயரும் இடம்பெற்று உள்ளது.
மன்னார்குடியில் இருக்கும் அவரின் வீடு, உறவினர்கள் வீடுகள், நண்பர்களின் வீடுகள் என ஒட்டு மொத்தமாக 49 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதிகாலை தொடங்கிய ரெய்டு தொடர்ந்து நீடிப்பது அதிமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
உணவுத்துறை அமைச்சராக இருந்த தருணத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக காமராஜ் மீது புகார்கள் எழுந்தன. அதன் அடிப்படையில் இப்போது சோதனை நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.