கொரோனாவை ஓரங்கட்டிய புது வைரஸ்…! 1932க்கு பின்னர் என்ட்ரி..! உலக நாடுகள் அலறல்
பெய்ஜிங்: கொரோனாவை ஓரங்கட்டும் வகையில் சீனாவில் புதிய வகை வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, உலக நாடுகளை அதிர வைத்துள்ளது.
உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகள் இன்னமும் கொரோனாவின் பிடியில் இருந்து விடுதலையாகவில்லை. 2ம் அலை, 3ம் அலை என்று பாதிப்புகள் வட்டமடிக்க தொடர்ந்து சேதாரத்துக்கு ஆளாகி இருக்கின்றன.
இப்போது உலக நாடுகளுக்கு புது தலைவலியாக புதிய வைரஸ் ஒன்று சீனாவில் கண்டறியப்பட்டு உள்ளது. இந்த வைரசானது 1932ம் ஆண்டுக்கு பின்னர் இப்போது தான் கண்டறியப்பட்டு உள்ளது. இந்த வைரஸ் தாக்கியதில் சீனாவில் உள்ள மருத்துவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அந்த மருத்துவருக்கு வயது 53. கால்நடை மருத்துவர். இறந்து போன 2 குரங்குகளுக்கு அவர் பிரேத பரிசோதனை செய்துள்ளார். மார்ச் மாதம் இநத் சம்பவம் நடந்தது. அதன்பின்னர் வாந்தி, மயக்கம், காய்ச்சல் வர மருத்துவமனைக்கு கொண்டு போகப்பட்டு உள்ளார்.
சில வாரங்கள் மருத்துவமனையில் இருந்து பின்னர் உயிரிழந்து இருக்கிறார். அவரது உடலை அங்குள்ளோர் பிரேத பரிசோதனை செய்துள்ளனர். அப்போது தான் அவர்களுக்கு ஒரு முக்கிய விவரம் தெரிய வந்துள்ளது.
அதாவது, குரங்குகளை தாக்கும் monkey B virus தாக்கி உள்ளது என்றும், அதுவே அவரது மரணத்துக்கு காரணம் என்றும் தெரிய வந்திருக்கிறது. இந்த வைரஸ் விலங்குகளிடம் இருந்து மனிதனுக்கு பரவக்கூடிய வைரசாகும்.
இந்த வைரஸ் தாக்கினால் அவ்வளவுதான் 80 சதவீதம் மரணம் நிச்சயம் என்று அலற வைக்கின்றனர் மருத்துவர்கள். இன்னும் சொல்ல போனால், குரங்கு வைரசால் இப்போது தான் மனித உலகில் முதல்முறையாக ஒருவர் மரணம் அடைந்திருக்கிறார்.
1932ம் ஆண்டுக்கு பின்னர் இப்போது தான் இந்த வைரஸ் கண்டறியப்பட்டு உள்ளது. ஆகையால் விலங்குகளுடன் நேரடி தொடர்பில் உள்ளவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.