மே 25ம் தேதிக்கு பிறகு பள்ளிகள் திறப்பா….? தமிழக அரசின் துணிச்சல் முடிவு…!
சென்னை: தமிழகத்தில் மீண்டும் ஆசிரியர்களை பள்ளிக்கு வரவழைப்பது தொடர்பான தமிழக அரசு முக்கிய முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.
தமிழகத்தில் கொரோனாவின் 2ம் அலை உச்சத்தில் இருக்கிறது. அதன் எதிரொலியாக கல்வி நிலையங்கள் கடந்த ஓராண்டாக நடக்கவில்லை. 2020-21ம் கல்வி ஆண்டு முடிவுக்கு வந்ததால் மறு உத்தரவு வரும் வரை ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
தற்போது தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் பள்ளிக்கல்வி அமைச்சராக பொறுப்பேற்றுள்ள அன்பில் மகேஷ் துறை ரீதியான கூட்டங்களை நடத்தி ஆலோசனைகளை கேட்டு வருகிறார். பிளஸ் 2 தேர்வுகள், புதிய கல்வி ஆண்டில் செய்யப்பட உள்ள ஏற்பாடுகள் குறித்து அவர் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்த மாதம் இறுதியில் புதிய கல்வியாண்டு தொடங்க உள்ளதால் ஆசிரியர்களை பள்ளிக்கு வரவழைக்க அரசு தரப்பில் திட்டமிடப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ஆசிரியர்களை மட்டும் வரவழைத்து பள்ளிகளை இயக்கலாம் என்றும், வீட்டில் இருந்தவாறே மாணவர்களை கற்க வைக்க ஏற்பாடுகளை செய்யலாம் என்று முடிவு செயயப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
உரிய தடுப்பு நடவடிக்கைகளுடன் பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் வர வேண்டும் என்றும் எந்த தருணத்திலும் யாரும் அலட்சியமாக இருக்க கூடாது என்று அறிவுறுத்தப்பட உள்ளது என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.