தடுப்பூசி போட்டாலும் கொரோனா தாக்கும்..! ஆய்வில் ஒரு டுவிஸ்ட்…?
தடுப்பூசி செலுத்திக் கொண்டாலும், கொரோனா அறிகுறிகளை காட்டும் நபர்கள் எண்ணிக்கை குறைவு என்று தேசிய புள்ளியியல் அலுவலகம் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
கொரோனா தடுப்பூசி போட்ட பிறகும் தொற்றால் பாதிக்கப்படும் நபர்களும் இருக்கவே செய்கிறார்கள். ஆனாலும் கொரோனாவில் இருந்து காத்துக் கொள்ளும் பேராயுதம் தடுப்பூசி என்பது மருத்துவ வல்லுநர்களின் வாதமாகும்.
இந்நிலையில் பிரிட்டனில் உள்ள தேசிய புள்ளியியல் அலுவலகத்தில் சர்வே முடிவுகள் வெளியாகி இருக்கின்றன. தடுப்பூசி போட்ட பின்னர் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் பற்றி இந்த ஆய்வில் விவரங்கள் சேகரிக்கப்பட்டு உள்ளன.
கடந்தாண்டு டிசம்பர் 1ம் தேதி முதல் மே 31ம் தேதி வரை ஆய்வு நடத்தப்பட்டு உள்ளது. குறிப்பாக தடுப்பூசி தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு உள்ளது. தடுப்பூசி செலுத்தி கொண்ட பின்னர், 2 வாரங்களில் கொரோனா தொற்று ஏற்படுவதற்கான ஆபத்து மிக அதிகமாக உள்ளது, 2வது டோஸ்க்கு பின்னர் தொற்று குறைகிறது என்று தெரிய வந்துள்ளது.
இது தவிர, தடுப்பூசி செலுத்திய பின்னர் தொற்றுக்கு ஆளானவர்கள் 40 சதவீதத்துக்கும் குறைவானவர்களே அறிகுறிகளுடன் இருந்தனர் என்றும் ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டு உள்ளது.