மாவட்ட செயலாளர்களுக்கு ரஜினிகாந்த் வார்னிங்…! வெளியான புதிய அறிவிப்பு
சென்னை: ஓட்டுக்கு பணம் கொடுக்கக் கூடாது என்று நிர்வாகிகளுக்கு ரஜினி மக்கள் மன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
எப்படியோ… 25 ஆண்டுகாலம் எதிர்பார்த்திருந்த ரஜினியி அரசியல் கட்சி அடுத்த மாதம் அறிவிக்கப்படுகிறது. அரசியலில் கால் வைத்துள்ள ரஜினிகாந்த் இப்போது அண்ணாத்த படப்பிடிப்பில் ஐதராபாதில் பிசியாக இருக்கிறார்.
தாம் படப்பிடிப்பில் இருந்தாலும் மன்ற நிர்வாகிகளின் நடவடிக்கைகளை அவர் தொடர்ந்து கண்காணித்து வருகிறார். இந் நிலையில் வாக்குக்காக மக்களுக்கு பணம் கொடுக்க கூடாது என்று தமது மக்கள் மன்றத்தினருக்கு ரஜினிகாந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து ஒரு உத்தரவு ரஜினியின் மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அதாவது தமிழகத்தில் வரும் 25ம் தேதிக்குள் பூத் கமிட்டி உறுப்பினர்களின் பட்டியல்களை தலைமை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.
பணம் பெறும் மாவட்ட செயலாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டு உள்ளது. பூத் கமிட்டிக்கு உறுப்பினர்களை நியமிக்கும் போது எக்காரணம் கொண்டு பணம் பெறக்கூடாது என்று கடுமையாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.