Sunday, May 04 12:48 pm

Breaking News

Trending News :

no image

இப்படி பண்ணிட்டீங்களே ஸ்டாலின்…? புலம்பி தள்ளும் நெட்டிசன்ஸ்…!


சென்னை: ஒரு போட்டோவை பார்த்து ஏன் முதலமைச்சர் ஸ்டாலின் இப்படி பண்ணிவிட்டார் என்று நெட்டிசன்கள் கேள்வி மேல் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இது நவீன உலகம்… என்ன எங்கு நடந்தாலும் ஒரேயொரு போன் மூலம் அத்தனையும் தெரிந்து கொள்ளும் வசதி வந்துவிட்டது. அதுவும் கொரோனா காலத்தில் உலகமே செல்போனும், டீவியும் என்றாகிவிட்டது.

இப்படியிருக்க கூடிய நிலைமையில் முதலமைச்சர் ஸ்டாலினின் ஒரு போட்டோவை பார்த்துவிட்டு ஏகப்பட்ட மக்கள் கேள்வி, கேள்வி கேட்டும், தங்கள் ஆற்றாமையை வெளிப்படுத்தியும் வருகின்றனர். இந்த பிரச்னைக்கு காரணகர்த்தா என்று பார்த்தால் எல்லோரும் நடிகை யாஷிகா ஆனந்தை கை காட்டி வார்த்தைகளினால் வறுத்தெடுத்து வருகின்றனர்.

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு சைக்கிள் ஓட்டுவதில் அலாதி பிரியம். அப்படித்தான் சில நாட்களுக்கு முன்னர் சைக்கிளில் சென்ற போது அவரை பார்த்திருக்கிறார் நடிகை யாஷிகா ஆனந்த். பார்த்த மாத்திரத்தில் மகிழ்ச்சியின் உச்சத்துக்கே போன அவர் ஒரு காரியம் செய்தார்.

முதல்வர் அருகிலேயே இருக்கிறார்…? எப்படி சும்மா வருவது என்று எண்ணியவர் அவருடன் ஒரு செல்பி எடுத்து மகிழ்ந்திருக்கிறார். அத்தோட அவர் அதை நிறுத்தி இருக்கலாம்… ஆனால் எப்படி ஒரு முதல்வருடன் எடுத்த போட்டோவை நாம் மட்டுமே எடுத்து பார்த்துக் கொண்டு இருந்தால் எப்படி என்று நினைத்து டுவிட்டரில் பகிர்ந்து ஆனந்தமாகி இருக்கிறார்.

அவ்வளவு தான்… சதா சர்வ நேரமும் டுவிட்டரை நோண்டு, நோண்டு என்று நோண்டிக் கொண்டிருக்கும் அறிவு பெட்டகங்கள் ஏதோ பட்டிமன்றம் ரேன்சுக்கு பேச ஆரம்பித்து விட்டனர். சொல்லி வைத்தது போன்று அனைத்து நெட்டிசன்களும் ஒரே கேள்வியை தான் ரிபீட் மோடில் கேட்டு வருகின்றனர்.

கொரோனா பிரச்னை இன்னமும் தீர்ந்தபாடில்லை… இப்போது மாஸ்க் இல்லாமல் அதுவும் ஒரு முதல்வரே இப்படி செய்யலாமா என்று கேட்டுள்ளனர். இன்னும் சிலரோ… போட்டோ எடுத்தால் தன்னோடு வைத்து கொள்ள வேண்டியதுதானே… எதற்கு இந்த பப்ளிகுட்டி (அதாங்க… பப்ளிசிட்டி) என்று கடுப்பில் யாஷிகாவை திட்டி தீர்க்கின்றனர்.

வேறு சிலரோ… எடுத்துக்காட்டாக இருக்க வேண்டிய முதல்வர்…. இப்படி மாஸ்க் இல்லாமல் போட்டோ எடுத்துக் கொள்ளலாமா அல்லது அதற்கு அனுமதிக்கலாமா என்று கேள்வி கேட்டு வருகின்றனர். ஒரு போட்டோவுக்காக இப்படி டிஷ்யூம் கருத்துகளை வெளியிட வேண்டுமா என்று உ.பி.க்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

Most Popular