அதிமுக ஆபீஸ் சாவியை ஈபிஎஸ்கிட்ட கொடுங்க…! ஒரே போடாக போட்ட ஐகோர்ட்
சென்னை: அதிமுக அலுவலகத்தின் சீலை அகற்றி அலுவலகத்தின் சாவிகளை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.
அதிமுக அலுவலகத்தில் ஜூலை 11ம் தேதி வன்முறை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து அலுவலகத்தை வருவாய்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். இதை எதிர்த்து இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கலானது.
இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்கள், விசாரணைகள் உள்ளிட்ட அனைத்தும் நிறைவடைந்த நிலையில் இன்று நீதிமன்றம் தமது தீர்ப்பை வெளியிட்டு உள்ளது. அதில் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற நீதிபதி சதிஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
விரும்பத்தகாத சம்பவங்கள் எதுவும் ஒரு மாதம் நடக்க காவல்துறை அனுமதிக்க கூடாது, அலுவலகத்துக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் அவர் தமது தீர்ப்பில் கூறி உள்ளார். மேலும், அதிமுக அலுவலகத்தின் சாவியை எடப்பாடி பழனிசாமியுடன் ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு உள்ளார்.