இனி வாங்கவே முடியாதா..? தங்கம் விலை தாங்க முடியல
சென்னை: முன் எப்போதும் இல்லாத வகையில் ஆபரணத் தங்கத்தின் விலை உச்சத்துக்கு சென்றிருப்பது பெண்களை அதிர வைத்துள்ளது.
நாள்தோறும் தங்கத்தின் விலை பற்றிய அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. கடந்த பல ஆண்டுகளாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் அதன் மவுசு குறையவில்லை.
விலை உயர்வு மெல்ல, மெல்ல மேலே செல்ல செல்ல, அதை பற்றி பெண்களின் கவலையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தற்போது முன் எப்போதும் இல்லாத வகையில் உயர்ந்திருக்கும் தங்கத்தின் விலையால் பெண்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னையில் ஆபரணத்தங்கம் சவரனுக்கு கிடுகிடுவென 960 ரூபாய் உயர்ந்து 46,560க்கு விற்பனையாகிறது.கிராமுக்கு 120 ரூபாய் அதிகிரித்து, 5820 ஆக இருக்கிறது.
வெள்ளியின் விலையும் கணிசமாக உயர்ந்து இருக்கிறது. கிராமுக்கு 2.50 ரூபாய் அதிகரித்து 79.50 ரூபாய்க்கு விற்பனையாகிறது.தங்கத்தின் விலையில் ஏற்பட்ட இந்த திடீர் மாற்றம், பெண்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.