#RIPCaptain எப்படி இறந்தார்…? மருத்துவமனை அறிக்கை
சென்னை: உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்த விஜயகாந்த் மரணம் எதனால் நிகழ்ந்தது என்று மருத்துவமனை தரப்பு விளக்கம் அளித்துள்ளது.
நடிகர், தேமுதிக தலைவர் விஜயகாந்த் நுரையீரலில் ஏற்பட்ட தொற்று, இருமல் காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடல்நலம் தேறிய நிலையில் கடந்த 11ம் தேதி வீட்டுக்கு அழைத்து வரப்பட்டார்.
நேற்று முன்தினம் மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டு போகப்பட, கட்சியினர் அதிர்ந்தனர். அவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக இன்று மருத்துவமனை அறிவித்தது. வெண்டிலேட்டர் மூலம் சிகிச்சை நடப்பதாகவும் கூறியது.
இந் நிலையில், சிகிச்சை பலனின்றி விஜயகாந்த் காலமானார். அவரின் மறைவை அறிந்த தொண்டர்கள், திரையுலகினர் கண்ணீர் வடித்து கதறி வருகின்றனர், விஜயகாந்துக்கு என்ன ஆனது? எதனால் அவரது மரணம் என்று மருத்துவமனை நிர்வாகம் விளக்க அறிக்கை வெளியிட்டு உள்ளது.
அதன் விவரம் வருமாறு:
விஜயகாந்த் நுரையீரல் அழற்சி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வெண்டிலேட்டர் ஆதரவுடன் சிகிச்சை பெற்றிருந்தார்.
மருத்துவ பணியாளர்களின் கடின முயற்சி இருந்த போதும், அவர் இன்று காலை 28 டிசம்பர் 2024 காலமானார் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.