டாய்லெட் பேப்பர் திமுக…!
சகலத்தையும் பயன்படுத்தி தேர்தல் களத்தில் இறங்கி இருக்கிறார் தமிழக பாஜக அண்ணாமலை இறங்கி இருக்கிறார் என்பது ஒரு பேட்டியில் தெளிவாகி உள்ளது.
கோவை தொகுதி நாடாளுமன்ற பாஜக வேட்பாளர் அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை. வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின் டெல்லியில் இருந்து கோவை வந்த அவருக்கு விமான நிலையில் உற்சாக வரவேற்பு. அங்கேயே அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
வழக்கம் போல் அதிரடியாக பேசி, தேர்தல் பிரச்சாரத்தை ஏர்போர்ட்டில் இருந்தே தொடங்கி இருக்கிறார். அவர் பேசும் போது, திமுக மீது கடும் விமர்சனத்தை முன்வைத்தார். அண்ணாமலை பேசியதாவது:
எனக்கு தமிழக அரசியல்தான் பிடிக்கும். டெல்லி அரசியலுக்கு போகமாட்டேன். பிரதமரின் உத்தரவின் பேரில் போட்டியிடுகிறேன். பிரதமரின் தமிழக வருகை, 2026ல் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கத்தான்.
திமுக தேர்தல் அறிக்கையில் இருப்பது அனைத்தும் பொய். 2026 தேர்தலில் திமுக இலவசமாக பெட்ரோல், டீசல் தருவோம் என்பார்கள். வீட்டில் பைப் போட்டு அதில் அனுப்பி விடுவார்கள்.
வீட்டில் toilet paper இல்லை என்றால் திமுக தேர்தல் அறிக்கையை பயன்படுத்துங்கள், பெண்கள் சாமான் வாங்கும்போது திமுக தேர்தல் அறிக்கையை கிழித்து பொட்டலம் கட்டுங்கள் என்று பேசி உள்ளார்.
பேச்சின் மூலம் வெகுஜன மக்களை ஈர்த்துவிடலாம் என்ற கணக்கே அவரின் இதுபோன்ற நாலாந்திர பேச்சுக்கு காரணம் என்று அரசியல் விமர்சகர்கள் கூறி இருக்கின்றனர். ஆனால் அடுத்து வரக்கூடிய நாட்களில் அண்ணாமலையின் தேர்தல் பிரச்சாரத்தில் இதே போன்று பேசிக் கொண்டே இருந்தால் மக்களுக்கு வெறுப்பு தான் வருமே தவிர, ஆதரவு கிடைக்காது என்றும் அவர்கள் எச்சரிக்கின்றனர்.
கோவை ஏர்போர்ட்டில் அண்ணாமலை அளித்த பேட்டியின் வீடியோ கீழே தரப்பட்டுள்ளது. அதை காணலாம்;