Sunday, May 04 12:17 pm

Breaking News

Trending News :

no image

சசிகலாவின் மெகா அஸ்திரம்…? ரிலீசாகும் ‘அந்த’ வீடியோ..? திகிலில் எடப்பாடி டீம்


சென்னை: ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த போது எடுக்கப்பட்ட வீடியோவை சசிகலா வெளியிட தீர்மானித்துள்ளதாக வெளியான தகவலால் எடப்பாடி டீம் திகிலில் உள்ளது.

தமிழகத்தில் 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அதிமுக தேர்தலில் தோற்றது. திமுக இப்போது அரியணையில் உட்கார்ந்து எப்போது வேண்டுமானாலும் அதிமுக மாஜி அமைச்சர்கள் மீது கைது நடவடிக்கை பாயலாம் என்ற நிலை நிலவி வருகிறது.

அதிமுகவில் தலைமையை கைப்பற்ற நினைக்கும் ஓபிஎஸ், இபிஎஸ் யுத்தம் இன்னமும் ஓயவில்லை… உள்ளாட்சி தேர்தல் வர உள்ளதால் இப்போதைக்கு அதிகார சண்டை ஓயப்போவது இல்லை என்று தெரிகிறது. இப்படி இடியாப்ப சிக்கலில் அதிமுக இருக்க… சசிகலா எடுத்துள்ள ஒரு முக்கிய முடிவை அறிந்த அதிமுக முகாம் திகிலில் உறைந்து போயிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

குறிப்பாக எடப்பாடி டீம் ஒட்டுமொத்தமாக பதைபதைப்பில் உள்ளதாம். அதாவது…. மறைந்த ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த தருணத்தில் என்ன நடந்தது என்ற வீடியோவை வெளியிட உள்ளாராம்.

ஜெயலலிதா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போது எடுக்கப்பட்ட காட்சிகள் அந்த வீடியோவில் உள்ளதாம். ஆர்கே நகர் இடைத்தேர்தலின் போது வெற்றிவேல் இதுபோல ஒரு வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார் அல்லவா…?

அது போன்ற ஒரு பிரம்மாஸ்திரமான வீடியோவை வெகு விரைவில் சசிகலா ரிலீஸ் செய்ய போகிறார் என்ற பேச்சுகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. கூடிய விரைவில் தமிழகம் முழுவதும் தொண்டர்களை சந்திக்க அவர் சுற்றுப்பயணம் செய்ய உள்ளார். இந்த சுற்றுப்பயண புரோகிராமுக்கு முன்னதாக இந்த வீடியோவை ரிலீஸ் செய்துவிட்டு பயணத்தை ஆரம்பிக்கலாம் என்று அவர் நினைக்கிறாராம்.

சசிகலா வெளியிட உள்ள வீடியோவில் ஜெயலலிதாவும், தாமும் இருக்கும் காட்சிகள் மட்டும் முதல்கட்டமாக ரிலீஸ் செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ஜெயலலிதாவின் அன்பு, கடைசி கட்ட காலத்தில் நம்பிக்கைக்கு உரியவராக யார் இருந்தார்கள் உள்ளிட்ட விவரங்கள் இதன் மூலம் வெளியிட்டு, அவரின் கடைசி நேர அன்பும் தம்மிடம் மட்டும் தான் இருந்தது என்பதை உணர்த்த சசிகலா முடிவெடுத்துள்ளாராம்.

சசிகலாவின் இந்த மூவ் அறிந்த அதிமுக தலைமையும், எடப்பாடி டீமும் திகிலில் இருக்கிறராம். ஒருவேளை வீடியோ ரிலீசானால் அதை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து யோசனையில் அனைவரும் உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆக மொத்தம்… அதிமுகவுக்கு விரைவில் பல அதிர்ச்சிகர விஷயங்கள் காத்திருக்கின்றன என்று கூறுகின்றனர் விவரம் அறிந்தவர்கள்…!

Most Popular