சின்ன வயசு… நடிகர் விஜய் மடியில் இருப்பவர் யார்…? ஒரு போட்டோ ஆச்சரியம்
சென்னை: நடிகர் விஜய்யின் மடியில் உட்கார்ந்து இருக்கும் போட்டோவில் அவரது தம்பியும், நடிகருமான விக்ராந்த் வெளியிட்டுள்ளது, வைரலாகி இருக்கிறது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டு இருக்கும் நடிகர் விஜய்க்கு இன்று பிறந்த நாள். நேற்று முதலே கொண்டாட்டங்கள் களைகட்டி வருகின்றன.
தளபதி 65 படத்தின் பெயர் பீஸ்ட் என்று அறிவித்து அதன் பர்ஸ்ட் லுக்கையும் நேற்று வெளியிட்டு சன் பிக்சர்ஸ் நேற்றே கொண்டாட்டத்தை ஆரம்பித்து வைத்துள்ளது. இன்னமும் விஜய் ரசிகர்கள் கொண்டாட்ட மூடில் உள்ளனர்.
நாளுக்கு நாள் அவரது ஸ்டைலிஷ், ஆக்டிங்கிம் மெருகேறி வரும் நிலையில் சின்ன வயசில் விஜய்யின் மடியில் இருக்கும் போட்டோவை ரிலீஸ் செய்திருக்கிறார் விக்ராந்த். இவர் அவரது தம்பி மட்டுமல்ல…. நடிகரும் கூட.
இந்த போட்டோவை பார்க்கும் போது தெரிகிறது…. மிக இளம் வயதில் மீசை கூட இல்லாமல் அந்த போட்டோவில் பக்கா அழகாக தெரிகிறார் விஜய். அருகில் அவரது அம்மா அமர்ந்திருக்கிறார். விஜய் மடியில் சின்ன தம்பியாக விக்ராந்த் அமர்ந்து கொண்டு சாப்பிட்டு கொண்டு இருக்கிறார்.
திருமண விருந்தில் இந்த போட்டோ எடுக்கப்பட்டு உள்ளது. ஆண்டுகள் பல ஆனாலும் விஜய்யின் இந்த போட்டோவை மறக்க மாட்டோம் என்பது போல படத்துக்கு ஏராளமான லைக்குகளும் வந்து குவிகின்றன.