என்ன செஞ்சாரு அண்ணாமலை…? வந்தாச்சு புது சிக்கல்
கோவை நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர், தமிழக பாஜக தலைவர் என அடையாளத்துடன் உள்ள அண்ணாமலை வேட்பு மனு தாக்கல் முடிந்து தீவிர பிரச்சாரத்தில் இறங்கி இருக்கிறார்.
வானதி சீனிவாசனுடன் அவர் பிரச்சார களத்தில் அளிக்கும் பேட்டிகள் வைரல். சவுமியா அன்புமணி பற்றி பேசியது, ஜெயிக்கணும்ங்கறது என் எண்ணம் அல்ல என்று கூறியது பாஜக தொண்டர்களையே யு டர்ன் அடித்து குழப்ப வைத்திருக்கிறது.
மக்கள் ஆதரவு இருக்கிறதா? இல்லையா? என்று தெரியாத நிலையில் தொழில் துறையினரின் ஆதரவு அபரிமிதமாக உள்ளதாக பாஜக தரப்பு செய்திகளை கசிய விட்டு இருந்தது. இது உண்மையா? என்று அனைவரும் யோசித்துக் கொண்டு இருக்க… அதில் இடியை இறக்கி இருக்கின்றனர் தொழில் துறையினர்.
எங்களின் பிரச்னையே பாஜக தான், அதன் தலைவர் அண்ணாமலையிடம் தங்கள் பிரச்சனைகளை பல முறை கூறியாகிவிட்டது. ஆனால் என்ன நடந்துடுச்சு..? அவர் மீது நம்பிக்கை இல்லை என்று அடுக்கடுக்காக போட்டு உடைத்து இருக்கிறார் தொழில் முனைவோரான கிருத்திகா கோவிந்தராஜூலு.
இதுபற்றிய வீடியோ தான் இப்போது கோவை வட்டாரத்தில் டாப். பாஜக மீது நம்பிக்கையே இல்லை என்று கழுவி ஊற்றும் அந்த வீடியோ இதோ;