கொரோனா ஒழிப்பில் தமிழக அரசின் மெகா ‘மூவ்’…! இதோ… முக்கிய அறிவிப்பு
சென்னை: கொரோனா தடுப்பூசி கொள்முதலுக்காக உலகளாவிய ஒப்பந்தப்புள்ளிளை தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் கோரி உள்ளது.
தமிழகத்தில் கொரோனாவின் ஆட்டம் இப்போதைக்கு ஓயாது போல் தெரிகிறது. மாவட்டங்கள், மாவட்டங்களாக அமைச்சர்களும், அதிகாரிகளும் முழு வீச்சில் இறங்கி தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். ஆனாலும் பாதிப்பு அதிகரித்து வருகிறதே தவிர குறையவில்லை.
கொரோனா தடுப்பூசி தட்டுப்பாட்டை போக்க வெளிநாடுகளில் இருந்து தடுப்பூசிகளை பெறும் வண்ணம் உலகாளவிய ஒப்பந்தம் கோரப்படும் என்று தமிழக அரசு அறிவித்து இருந்தது. மத்திய அரசு தரும் கொரோனா தடுப்பூசிகள் போதாமல் உள்ளதாக தமிழக அரசு கூறியிருந்தது. ஆகையால், அறிவித்தபடி உலகளாவிய ஒப்பந்தத்தை தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் கோரி உள்ளது.
90 நாட்களில் 5 கோடி தடுப்பூசிகள் வழங்கிட வேண்டும், அடுத்த மாதம் 5ம் தேதிக்குள் அதற்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தமிழ்நாடு மருத்துவ பணிகள் கூறி உள்ளது. தமிழ்நாடு சுகாதாரத்துறைக்கு பல்வேறு மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் வழங்கக்கூடிய நிறுவனம் தான் தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம்.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஒப்பந்தப்புள்ளியில் உலகஅளவில் தடுப்பூசி தயாரிக்கும் எந்த நிறுவனமும் கொள்முதலில் பங்கேற்கலாம். ஜூன் 5ம் தேதிக்குள் அதற்காக விண்ணப்பிக்கலாம்.