நச்சுன்னு நாலு…! முதலமைச்சர் ஸ்டாலினின் ‘செம’ மூவ்…!
சென்னை: தமிழகத்தில் நாளை முதல் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்திருந்தாலும் அவற்றில் 4 கட்டுப்பாடுகள் அதிக கவனம் பெறுகின்றன.
எப்போது தீரும் இந்த விவகாரம் என்பது தமிழகம் மட்டுமல்ல, நாடு முழுவதும் திரும்பிய திசைகளில் கொரோனா மயமாக தான் இருக்கிறது. இத்தனை பேருக்கு பாதிப்பு, இத்தனை பேர் மரணம், ஆக்சிஜன் பற்றாக்குறை, தடுப்பூசி இல்லை என்ற விஷயங்கள் மக்கள் மனதை பீதிக்குள்ளாக்குகின்றன.
கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவது ஒன்றே தான் அனைத்து பிரச்சனைகளுக்குமான தீர்வு என்பதால் அதற்கான நடவடிக்கைகளில் தமிழக அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. அதன் முக்கிய கட்டமாக தான் நாளை முதல் புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்து அதிரடிய காட்டி உள்ளது.
கிட்டத்தட்ட ஏராளமான கட்டுப்பாடுகள் இருந்தாலும் நான்கே நான்கு கட்டுப்பாடுகள் தான் முக்கியத்துவம் பெறுகின்றன. கொரோனா பாதுகாப்பு பணியில் இருந்தபோது ஆங்காங்கே இரு சக்கர வாகனங்களில் கடைக்கு போவதாக மக்கள் வெளியில் சுற்ற ஆரம்பித்தது, டீக்கடைகளில் மக்கள் குழுமியது. நடைபாதை காய்கறி கடைகளுக்கு சென்றது, மாவட்டம் விட்டு மாவட்டம் போவது ஆகிய கட்டுப்பாடுகளை சொல்லலாம்.
அதில் முக்கியமானது நண்பகல் 12 மணி வரை இயங்கும் கடைகளுக்கு காலை 10 மணி வரை என்ற கட்டுப்பாடு. தொலைதூர கடைகளுக்கு இனி செல்வது குறையும். அருகில் உள்ள கடைகளுக்கு தான் செல்லமுடியும்.. அதுவும் இரு சக்கர வாகனங்களில் தொலை தூரம் செல்வது குறையும்.
டீக்கடைகளை ஒட்டு மொத்தமாக அடைக்க உத்தரவிட்டுள்ளதால் அதிக கூட்டம், அரட்டை கச்சேரி ஆகியவற்றுக்கு இனி இடம் இல்லை. அடுத்ததாக எந்த விஷயமாக இருந்தாலும் அண்டை மாவட்டங்களுக்கு செல்வதாக இருந்தால் இ பாஸ் கட்டாயம் என்ற கட்டுப்பாடு.
இதன்மூலம் ஒரு மாவட்டத்தில் இருந்து இன்னொரு மாவட்டத்துக்கு செல்வது கட்டுப்படுத்தப்படும். கடைசியாக இரவுநேர ஊரடங்கு தொடரும் என்பது. தமிழக அரசின் இந்த கட்டுப்பாட்டால் இரவு நேர பயணம் இல்லாமல் போகும். இந்த 4 அதிரடியான முக்கியமான கட்டுப்பாடுகளுக்கு தமிழக அரசு அதிக முக்கியத்துவம் அளித்துள்ள நிலையில் அதற்கான பலன் என்பது அடுத்து வரக்கூடிய நாட்களில் தான் தெரியவரும்….!