என்ஜினியரிங் மாணவர்கள் கல்விக்கட்டணம் செலுத்த வேண்டுமா..? ஏஐசிடிஇ அதிரடி…!
டெல்லி: கொரோனா பரவல் எதிரொலியாக, என்ஜினியரிங் மாணவர்களை கல்விக் கட்டணம் கட்டுமாறு கட்டாயப்படுத்தக் கூடாது என்று ஏஐசிடிஇ அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் வேகம் எடுத்துள்ள கொரோனா 2ம் அலையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதித்துள்ளது. ஒரு நாளைக்கு 4 லட்சம் பேர் பாதிக்கப்படுவதால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. பரவல் உச்சத்தில் இருப்பதால் ஒவ்வொரு மாநிலங்களாக ஊரடங்கை நடைமுறைப்படுத்தி வருகின்றன.
இந் நிலையில் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலான ஏஐசிடிஇ அறிவித்துள்ளது. இது குறித்து சுற்றறிக்கை ஒன்றையும் அனுப்பி உள்ளது.
அதில் கூறப்பட்டு உள்ளதாவது: மாணவர்களிடம் கல்விக்கட்டணத்தை 4 தவணைகளில் வசூலிக்க வேண்டும். பேராசிரியர்களை எக்காரணம் கொண்டு பணியில் இருந்து நீக்கம் செய்யக்கூடாது. யாரேனும் பணியில் இருந்து நீக்கப்பட்டு இருந்தால் அவர்களை உடனடியாக பணியில் சேர்த்து கொள்ள வேண்டும். பேராசிரியர்களின் மாத ஊதியத்தை உரிய தருணத்தில் கட்டாயம் வழங்க வேண்டும் என்று கூறி உள்ளது.