மாஸ்க் இல்லன்ன மாட்டிக்குவீங்க..! துப்பினா 500 ரூபாய் பைன்…! அதிரடி காட்டும் அரசு
சென்னை: கொரோனா விதிகளை கடைபிடிக்காதவர்களுக்கு தண்டனையை தமிழக அரசு கடுமையாக்கி உள்ளது.
கொரோனா எதிரொலியாக கடந்த மார்ச் முதல் ஊரடங்கு தமிழகம் முழுவதும் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அவ்வப்போது அதில் தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
இப்போது பேருந்து போக்குவரத்தும், ரயில் சேவைகளுக்கும் அனுமதி தரப்பட்டு உள்ளது. இந் நிலையில் கூடுதல் தளர்வுகள் காரணமாக பலர் விதிகளை மீறும் வாய்ப்புகள் அதிகரித்து உள்ளன.
ஆகையால் விதிகளை கடுமையாக்கும் வகையில் அரசானது பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளது. அதன் படி, தமிழகத்தில் பொது இடங்களில் மாஸ்க் அணியாவிட்டால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும்.
தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்கவேண்டும். அப்படி இல்லாமல், எச்சில் துப்பினால், கொரோனா தனிமைப்படுத்துதல் விதிமுறைகளை மீறினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும். அழகுநிலையங்கள், ஜிம் போன்றவற்றில் கொரோனா விதிகள் மீறப்பட்டால் 5000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.