நயன்தாராவுடன் பிரேக் அப் ஆயிடுச்சா….? போட்டோ வெளியிட்ட விக்னேஷ் சிவன்…!
சென்னை: நயன்தாராவுடன் உறவு முறிந்துவிட்டதா, இல்லையா என்பதை ஒரு போட்டோ போட்டு அதிரடி காட்டி இருக்கிறார் விக்னேஷ் சிவன்.
நானும் ரவுடி தான் என்ற படத்தை விக்னேஷ் சிவன் இயக்கிய போது அந்த படத்தின் நடித்த நயன்தாராவுடன் காதல் ஏற்பட்டது. இந்த காதல் தொடக்க காலத்தில் படு ரகசியமாக வைக்கப்பட்டு இருந்தாலும் பின்னர் கசிந்தது. இருவரும் கிட்டத்தட்ட 5 ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.
அவ்வப்போது இருவரும் சேர்ந்து இருக்கும் போட்டோக்கள் வெளியாகி இணையத்தில் பரபரப்பு கிளம்பும். அண்மையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டது தொடர்பாக நயன்தாராவின் போட்டோ ரிலீசானது. அந்த போட்டோவில் ஊசி குத்திக் கொண்டது போல் எதுவும் தெரியாததால் இருவர் இடையே சண்டை மூண்டதாக கூட பேசப்பட்டது.
விக்னேஷ் சிவன், நயன்தாரா இருவரும் பிரிந்துவிட்டதாகவும் கிசுகிசுக்கள் எழுந்தன. இந் நிலையில் இருவரும் பிரியவில்லை என்பதை உறுதிப்படுத்தும் விதமாக நயன்தாராவின் அடுத்த படமான நெற்றிக்கண் படம் பற்றிய அப்டேட் வெளியிட்டு உள்ளார் விக்னேஷ் சிவன்.
அதை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். நயனும், விக்னேசும் பிரியவில்லை என்று இந்த போட்டோ மூலம் தெரிகிறது என்றும் அவர்கள் கூறி இருக்கின்றனர். மிலிந்த் ராவ் டைரக்ஷனில் பார்வையில்லாத கேரக்டரில் நயன்தாரா நடித்திருக்கிறார்.