நடிகர் சிவகார்த்திகேயன் அப்பாவை கொன்னவரு இப்போ எம்எல்ஏ…!
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயனின் அப்பாவை கொன்றவர் இப்போது பாபநாசம் எம்எல்ஏவாக உள்ளார் என்று பாஜக மூத்த தலைவர் ஹெச் ராஜா கூறிய கருத்து பெரும் சர்ச்சைக்கு வித்திட்டு உள்ளது.
தமிழ் திரையுலகில் தற்போது முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் சிவகார்த்திகேயன். எந்தவித பின்புலமும் இல்லாமல் தமது சொந்த திறமையில் சின்னத்திரையில் கால்பதித்தவர். பின்னர் சினிமாவில் நுழைந்து முன்னணி நடிகர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என பன்முகத்திறமைகளை வெளிக்காட்டி வருபவர்.
இப்போது இவரது பெயரையும், மறைந்த அவரது தந்தையையும் பற்றி கூறி வம்பில் சிக்கிக் கொண்டிருக்கிறார் பாஜக ஹெச் ராஜா. செய்தியாளர்களை சந்தித்த அவர், ஜெயப்பிரகாசம் என்பவரை கொன்றது இன்றைய பாபநாசம் எம்எல்ஏ. அவர் மகன் தன் இப்போது சினிமாவில் வெற்றிக்கரமாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் என்று கூறி உள்ளார்.
ஹெச் ராஜா இப்படி கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியையும், சர்ச்சைகளையும் வித்திட்டு உள்ளது. அவர் குறிப்பிடுவது போன்று சிவகார்த்திகேயன் தந்தை பெயர் ஜெயப்பிரகாஷ் கிடையாது. அப்பா பெயர் தாஸ். அவர் கொலை செய்யப்படவில்லை, மாறாக இயற்கையாகவே மரணம் அடைந்தார் என்று சமூக வலைதளங்களில் கருத்துகளை பலரும் பதிவிட்டு வருகின்றனர்.