Sunday, May 04 12:14 pm

Breaking News

Trending News :

no image

24 மணிநேரத்தில்… உல்டா ஆயிடுச்சே…! மாநகராட்சி பல்டி


சென்னை: எதிர்ப்பு இருக்கே என்ன பண்ணலாம் என்று யோசித்த சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்கள் காலை உணவுத் திட்டத்தில் விளக்கம் கொடுத்து பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது.

நவம்பர் 29ம் தேதி சென்னை மாநகராட்சி கூட்டம் நடத்தப்பட்டது. அதில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சியின் கீழ் பள்ளிகளில் காலை உணவு வழங்குவதை ஓராண்டு தனியாருக்கு விட ஒப்பந்தம் செய்து கொள்ளலாம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அரசின் இந்த முடிவு மற்றும் அறிவிப்பு பெரும் விமர்சனத்தை எழுப்பியது. தனியார் நிறுவனம் மூலம் வழங்க சென்னை மாநகராட்சி எதற்கு? என்று கேள்விகள் எழுந்தன. மார்க்சிஸ்ட், பாமக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனத்தை முன்வைக்க, சென்னை மாநகராட்சிக்கும், தமிழக அரசுக்கும் கடும் நெருக்கடி எழுந்தது.

இந் நிலையில் 24 மணி நேரத்தில் அந்த முடிவை மாற்றி சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தனியாருக்கு கோர டெண்டர் அறிவிப்பு கொடுக்கப்படவில்லை என்றும் கூறி உள்ளது.

இதுதொடர்பான அறிவிப்பின் முழு விவரம்;

சென்னை மாநகராட்சியில் 358 பள்ளிகளில் 1 முதல் 5 - ம் வகுப்பு வரை பயிலும் 65 ஆயிரத்து 30 மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில், நிர்மாணிக்கப்பட்ட 35 சமையல் கூடங்களில் இருந்து, தினசரி உணவு வழங்கப்பட வேண்டிய அட்டவணையின்படி உயர் அலுவலர்களின் கண்காணிப்பில் காலை உணவு தரமாக தயாரித்து வழங்கும் பணி சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த பணியில் உயர் அலுவலர்கள் கொண்ட குழுவின் கண்காணிப்புடன் ஒப்பந்த அடிப்படையில் காலை உணவு தரமாகத் தயாரித்து வழங்குவதற்கான நிலை ஏற்படுமாயின் அதற்கான உத்தேச மதிப்பீடு தயாரித்து அதற்கான ஒப்புதல் சென்னை மாநகராட்சியின் மன்றத்தில் பெறப்பட்டது.

இதற்கான ஒப்பந்தப் புள்ளி ஏதும் தற்போது கோரப்படவில்லை. முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் சென்னை மாநகராட்சியில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டமானது தொடர்ந்து சிறப்பாக மேற்கொள்ளப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

ஆக அறிவித்த ஒரே நாளில் அதை மாற்றியது ஒரு பக்கம் சரியே என்றாலும், சாதாரணமாக மக்களால் புரிந்து கொள்ளக்கூடிய ஒரு எளிய விடயத்தை அதிகாரிகளும், மாநகராட்சி மன்றமும் புரிந்து கொள்ளாமல் போனது எப்படி தான் பலரின் கேள்வியாக இருக்கிறது.

Most Popular