Sunday, May 04 12:11 pm

Breaking News

Trending News :

no image

வீட்டை காலி செய்த ஓ. பன்னீர்செல்வம்…!


சென்னை: அரசு பங்களாவை காலி செய்துவிட்டு தி நகரில் உள்ள புது வீட்டுக்கு இடம் பெயர்ந்து இருக்கிறார் ஓ. பன்னீர்செல்வம்.

தமிழகத்தில் தேர்தல் முடிந்து பெரும்பான்மை பலத்துடன் திமுக ஆட்சி பொறுப்பேற்று இருக்கிறது. இதையடுத்து, முன்னாள் அமைச்சர்கள் தங்கியிருந்த அரசு பங்களாக்களை காலி செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.

இந் நிலையில் முன்னாள் முதலமைச்சரும், போடிநாயக்கனூர் எம்எல்ஏவுமான ஓ பன்னீர்செல்வம் நீண்ட நாட்களாக வீட்டை காலி செய்யாமல் இருந்தார். சென்னையில் முக்கிய பகுதியில் அவர் வீடு தேடி கொண்டு இருப்பதாக கூறப்பட்டது.

இந் நிலையில் தி. நகர் கிருஷ்ணா தெருவில் சிவாஜி வீட்டுக்கு அருகில் உள்ள புதுவீட்டுக்கு ஓ பன்னீர்செல்வம் தற்போது குடி பெயர்ந்து இருக்கிறார். கிரீன்வேய்ஸ் சாலையில் உள்ள அரசு பங்களாவில் இருந்து பெரும்பாலான பொருட்கள் எடுத்து செல்லப்பட்டுவிட்டன. முக்கிய பொருட்கள் புது வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டன. இன்னம் எடுக்க வேண்டிய பொருட்களை வரும் ஞாயிற்றுக்கிழமை எடுத்துக் கொள்வதாக ஓபிஎஸ் திட்டமிட்டு உள்ளாராம்.

Most Popular