Sunday, May 04 12:27 pm

Breaking News

Trending News :

no image

#Ponmudi வித, விதமாய் பம்முவது…! ரிவிட்டு அடித்த பிரபல நடிகை


சென்னை:தமக்கு வரும் போது மட்டும் நெஞ்சுவலி, வயது ஆகியவற்றை காரணம் காட்டுகிறார் பொன்முடி என்று போட்டு தாக்கி இருக்கிறார் நடிகை கஸ்தூரி.

கையில் படங்கள் இருக்கிறதோ இல்லையோ, எப்போதும் சமூக வலைதளங்களில் உலாவி வருபவர் நடிகை கஸ்தூரி. தமிழக அரசியல் நிலவரம் பற்றி, அரசியல் தலைவர்கள் பற்றி டுவிட்டிக் கொண்டே இருப்பவர்.

லேட்டஸ்ட்டாக 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட பொன்முடியை பற்றியும், நீதிமன்றத்தில் அவர் கூறிய விஷயத்தை பற்றியும் விமர்சித்து இருக்கிறார்.

இது குறித்து அவர் தமது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறி இருப்பதாவது:

https://twitter.com/KasthuriShankar/status/1737918875847753730

ஆண்டாண்டு காலம் சிறையில் சொல்லொண்ணா துயரங்களை அனுபவித்த

Veera savarkar,  VOC, பாண்டிச்சேரிக்கு ஓடிய Bharatiyar லாம்  கோழைகள்..

என்று நிந்திப்பது...

தொட்டுப்பார் சீண்டிப்பார் என்பது...

தனக்கு வந்தால் வயது, நோய், நெஞ்சு வலி என்று விதவிதமாய் பம்முவது...

இதுதான்...

என்று கூறி உள்ளார்.

ஒட்டுமொத்தமாக கேலி, அதனுடன் கொஞ்சம் கிண்டல் என்று திமுகவையும் நடிகை கஸ்தூரி வச்சு செய்திருக்கிறார் என்பதே இதில் தெரிகிறது. அவரின் கமெண்ட் அறிந்தை திமுகவினர் இன்னமும் கருத்து கூறாமல் இருப்பதுதான் ஆச்சரியமாக உள்ளது…!

Most Popular