சிவசங்கர் பாபாவை செருப்பால் அடிக்கணும்…! போலீசிடம் கேட்ட பிரபல நடிகை
சென்னை: பிரபல சாமியார் சிவசங்கர் பாபாவை செருப்பாலும் துடப்பத்தாலும் அடிக்கணும், டைம் கொடுங்க என்று போலீசிடம் கேட்டுள்ளார் பிரபல நடிகை ஆர்த்தி.
சென்னையை அடுத்துள்ளது கேளம்பாக்கம். இங்குள்ள சுஷில் ஹரி பள்ளியின் நிறுவனர் தான் சாமியார் சிவசங்கர் பாபா. பள்ளியில் உள்ள மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்ததாக புகார் எழுந்தது. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த புகாரை தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
வழக்கும் சிபிசிஐடிக்கு மாற்றப்பட அதிகாரிகள் சுறுசுறுப்பாகினர். டேராடூனில் பதுங்கியிருக்கும் பாபாவை தேடி தமிழக போலீசார் டேராடூன் விரைந்தனர். ஆனால் அங்கிருந்து எஸ்கேப்பாகி டெல்லியில் பக்தை ஒருவரது வீட்டில் பதுங்கியிருந்த சிவசங்கர் பாபா மொட்டையடித்துக் கொண்டு அடையாளம் தெரியாதவாறு இருந்தார்.
ஆனாலும் பக்காவாக ஸ்கெட்ச் போட்ட போலீசார் சிவசங்கர் பாபாவை தூக்கினர். பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் தமிழகம் கொண்டு வரப்பட்டவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதே நேரத்தில் சிவசங்கர் பாபாவை இணையத்தில் போட்டு ஆளாளுக்கு இஷ்டம் போல எண்ணெய் இல்லாமலே தாளித்து வருகின்றனர்.
சிவசங்கர் பாபாவுக்கு கடும் தண்டனை தர வேண்டும், அவரை விடக்கூடாது எனறு பலரும் கூறி வருகின்றனர். ஆனால் முற்றிலும் வித்தியாசமாக நடிகை ஒருவர் காவல்துறையினரிடம் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவர் வேறு யாருமல்ல… நடிகை ஆர்த்தி தான். சிவசங்கர் பாபா என்று பேரை குறிப்பிடாமல் அவர் ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டு உள்ளார். அதில் ஆர்த்தி கூறி இருப்பதாவது:
அந்த எச்ச சாமியாரை (சிவசங்கர் பாபாவை குறிப்பிடுகிறார்) 2 நாள் பொது இடத்தில் நிக்க வையுங்கள். அவனால் பாதிக்கப்பட்டவர்கள் வளர்ந்த குழந்தைகள், ஆசிரியைகள் மற்றும் பொதுமக்கள் 9am – 5pm வரை செருப்பால, துடப்பத்தால அடிக்கிறோம். பிறகு உங்கள் சட்டம் தன் கடமையை செய்யட்டும் என்று பொங்கி தள்ளி இருக்கிறார்.
அவரது டுவிட்டர் பதிவை பலரும் பாராட்டி வருகின்றனர். இதுதான் சரியான தண்டனை, ஆர்த்தியின் கோரிக்கையை காவல்துறை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.