விஜயகாந்துக்கு கொரோனா….! மருத்துவமனையில் அட்மிட்… தொண்டர்கள் கவலை
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
68 வயதான விஜயகாந்த் ஏற்கனவே உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு, தொடர்ந்து ஓய்வில் இருக்கிறார். இந் நிலையில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையடுத்து சென்னை மணப்பாக்கத்தில் பிரபல தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். தொடர் சிகிச்சையில் விஜயகாந்த் உள்ளார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
விஜயகாந்தின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா தொற்று என்பதை அறிந்த தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவர் விரைந்து குணமாக வேண்டும் என்றும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.