இசைக்கடவுள் இளையராஜாவுக்கு எம்பி பதவி…! பிரதமர் மோடி ‘செம' அறிவிப்பு
டெல்லி: இசையமைப்பாளர் இளையராஜா எம்பியாக நியமிக்கப்பட்டு உள்ளதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
இந்த விவரத்தை அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். ராஜ்யசபாவில் 12 பேர் நியமன உறுப்பினர்கள் (எம்பி) ஜனாதிபதியால் ஆக நியமிக்கப்படுகிறார்கள். அந்த வகையில் கலை, இலக்கியம், விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு நியமன எம்பி அளிக்கப்படும்.
தற்போது இசைக்கடவுள் என்று வர்ணிக்கப்படும் இசைஞானி இளையராஜாவுக்கு நியமன எம்பி அளிக்கப்பட்டு உள்ளதாக பிரதமர் மோடி தமது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இளையாராஜா அமெரிக்காவில் உள்ளதால் அவருக்கு இந்த தகவல் அனுப்பப்பட்டு உள்ளது.
அதேநேரத்தில் இளையராஜாவுக்கு எம்பி பதவி என்ற அறிவிப்பை தாங்கிய பிரதமர் மோடியின் டுவிட்டர் பதிவை, ஹெச் ராஜா உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் ரிடுவீட் செய்து பாராட்டு தெரிவித்துள்ளனர்.