ஓபிஎஸ் மருத்துவமனையில் திடீர் அட்மிட்…! தொண்டர்கள் மத்தியில் பரபரப்பு
சென்னை: துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் திடீரென மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டுள்ளார்.
அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ பன்னீர்செல்வம் சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். வழக்கமான உடல் பரிசோதனைக்கான அவர் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
அனைத்து மருத்துவ பரிசோதனைகளும் முடிந்த பின்னர், விரைவில் வீடு திரும்புவார் என்று கூறப்படுகிறது. முன்னதாக மே 25ம் தேதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஓபிஎஸ், அன்றே டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் என்பது நினைவிருக்கலாம்.