காரைக்குடி தொகுதியில் என்ன நடக்கிறது…? ஹெச். ராஜா முன்னிலையா..?
சென்னை: காரைக்குடி தொகுதியில் பாஜக வேட்பாளர் ஹெச் ராஜா தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறார்.
தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் நடைபெற்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கியது. தொடக்கத்தில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு அதன் பின்னர் இவிஎம் இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன.
தொடக்கம் முதலே அதிமுக, திமுக ஆகிய கூட்டணியில் நிலவரங்கள் மாறி மாறி வந்தன. தற்போது பெரும்பான்மைக்கு தேவையான தொகுதிகளை தாண்டி திமுக கூட்டணி கிட்டத்தட்ட 135 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. அதிமுக கூட்டணி 92 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.
அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற பாஜகவின் முக்கிய வேட்பாளர்கள் தொடக்க முதலே பின்னடைவில் உள்ளனர். காரைக்குடி தொகுதியில் போட்டியிட்ட ஹெச். ராஜா தொடக்கம் முதலே பின்னடைவை சந்தித்து வருகிறார்.
தாராபுரம் தொகுதியில் பாஜக தலைவர் எல் முருகன் தொடக்கத்தில் முன்னிலை வகித்து வந்தாலும் பின்னர் பின்னடைவை சந்தித்து உள்ளார். அரவக்குறிச்சி தொகுதியிலும் பாஜக பின்னடைவில் தான் இருக்கிறது.