கொரோனா ஒழியுமா…? ஜோதிடர்கள் ‘பகீர்’ கணிப்பும், பஞ்சாங்க விவரங்களும்…!
கொரோனா தொற்று இந்த உலகில் இருந்து எப்போது ஒழியும் என்பது பற்றி சோதிடர்கள் கூறியிருக்கும் காரணங்களும், அது பற்றிய பஞ்சாங்க காரணங்களும் மிரள வைத்துள்ளது.
2019ம் ஆண்டு முதல் இந்த உலகை ஆட்டி படைத்து வருகிறது கொரோனா வைரஸ். இந்த வைரஸ் தன்னைத்தானே தகவமைத்து கொண்டு உருமாறி, உருமாறி மக்களை அச்சுறுத்தி வருகிறது. தடுப்பூசிகள் ஒரு பக்கம் இருந்தாலும் கொரோனாவின் தாக்கம் ஓயவில்லை.
பஞ்சாங்கமும், சோதிடர்கள் சொல்லும் கணக்கீடும், காரணங்களும் மிரள வைக்கின்றன. பிலவி வருட பஞ்சாங்கத்தில் புது வகையான வைரசுகள் மக்களை தாக்கும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அப்போது தான் இந்த கொரோனா என்னும் புதுவகை வைரஸ் உலகம் அறிய தொடங்கியது.
இந்த கொரோனா இப்போது பல விதங்களில் உருமாறி பூஞ்சை தொற்றுகள் வரை நீண்டு இருக்கிறது. கொரோனாவின் பாதிப்பு 2023ம் ஆண்டு வரை நீடிக்கும் என்பது சோதிடர்கள் கணிப்பு.
இதுபற்றி சோதிடர்கள் கூறும் விவரங்களை பார்க்கலாம்: கால புருஷ தத்துவத்துக்கு 3ம் வீடான ரிஷபம் ராசியில் ராகு பகவான் உள்ளது. வேலையிழப்பு, பொருளாதார நெருக்கடி இதனால் தான் ஏற்படுகிறது. குரு இப்போது வக்ர கதியில் பின்னோக்கி பயணித்து கொண்டு இருக்கிறார். அக்டோபரில் மகர ராசியில் போய் மீண்டும் கும்ப ராசிக்கு செல்வார்.
அடுத்தாண்டு இந்த குருவானவர் 12வது வீடு மீனத்தில் நுழைவார். ராகு ரிஷப ராசியில் இருந்து மேஷத்துக்கு இடப்பெயர்ச்சியாவார். இந்த தருணத்தில் தான் கொரோனா என்னும் தொற்று சற்று கட்டுப்படும். புதுப்புது வேலை கிடைக்கும், பணம் பையை நிரப்பும்,நெருக்கடிகள் காணாமல் போகும்.
குருவின் சஞ்சாரம் எதிரொலியாக, 2021ம் ஆண்டு செப்டம்பரில் இருந்து கொரோனாவின் தாக்கம் உச்சத்தில் இருக்கும்.
இன்னும் சற்றே சொல்ல போனால் இந்த ஆண்டு நவம்பரில் பூவுலகம் மற்றொரு சவாலை சந்திக்கும் நிலைக்கு ஆட்படும். கும்பராசியில் இருந்து குரு தமது பயணத்தை ஆரம்பிப்பார். 2025ம் ஆண்டு வரை கொரோனா இந்த உலகை விட்டு விலகாது, உலக மக்கள் அதன் பாதிப்புகளையும், நெருக்கடிகளையும் எதிர்கொண்டே ஆக வேண்டி இருக்கும். 2029ம் ஆண்டு வரை கொரோனாவின் தாக்கம் நீடிக்கும் என்று எதிர்பார்க்கலாம். ஆறுதலாக பாதிப்பு என்பது இருப்பது போன்று மக்களை உலுக்கி எடுக்காது என்று சோதிடர்கள் கணித்து உள்ளனர்.
ஏற்கனவே அறிவியல் ரீதியாக கொரோனாவை இந்த உலகம் எதிர்கொண்டு இருக்கும் நிலையில் சோதிட ரீதியாக வெளியாகி உள்ள இப்படிப்பட்ட கணிப்புகள் மிகவும் கவனமாக பார்க்கப்படுகிறது. எது எப்படி இருந்தாலும் உலகம் கொரோனாவில் இருந்து விடுபட வேண்டும் என்பது ஒவ்வொரு மனிதனின் விருப்பமாக இருக்கிறது.