ரூ.2000 நோக்கி… சிலிண்டர் விலையை ஏத்தியாச்சு….!
சென்னை; வர்த்தக ரீதியான கேஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு உள்ளது.
தலைநகர் சென்னையில் 1942 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த சிலிண்டர் 26 ரூபாய் 50 காசுகள் அதிகரிக்கப்பட்டு உள்ளது. அதனால் இனி ஒரு வர்த்தக கேஸ் சிலிண்டர் விலை 1968 ரூபாயாக உயர்ந்துள்ளது.
வர்த்தக பயன்பாட்டு கேஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு உள்ளதால், வணிகர்கள், வியாபாரிகள், உணவகங்கள் போன்ற தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் பாதிக்கப்படும் சூழல் உருவாகி உள்ளது.
ஏற்கனவே தொழிலில் ஏற்பட்டுள்ள பல கட்ட நெருக்கடிகள் வருவாயை பாதித்துள்ள நிலையில் ஏறுமுகத்தில் கேஸ் சிலிண்டர் விலை இருப்பது மேலும் கவலையை ஏற்படுத்துகிறது என்று அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.