Sunday, May 04 12:34 pm

Breaking News

Trending News :

no image

மோடியை ஆபாசமாக திட்டிய இந்திய கிரிக்கெட் வீரர்….! ‘ஷாக்’ வீடியோ


டெல்லி;  பிரதமர் மோடியை இந்திய இளம் கிரிக்கெட் வீரர் ஒருவர் ஆபாசமாக பேசுவதாக ஒரு வீடியோ இணையத்தில் வெளியாகி பார்ப்போரை ஷாக்கடிக்க வைத்துள்ளது.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் அண்மையில் நடந்து முடிந்தது. பைனலில் ஆஸ்திரேலியாவிடம் தோற்று கோப்பையை இந்திய அணி பறிகொடுத்தது.

அணியின் அன்றைய ஆட்டம் குறித்து பல்வேறு கருத்துகள், விமர்சனங்கள் எழுந்தாலும், வீரர்களுக்கு அரசியல் ரீதியாக கொடுக்கப்பட்ட புற மன அழுத்தமே எதிர்வினையாக மாறிவிட்டது என்றும் பேசப்பட்டது. பைனல் முடிந்த பின்னர், வீரர்களை ஆறுதல்படுத்த பிரதமர் மோடி அவர்களின் ஓய்வறைக்கே சென்று சந்தித்தார்.

கேப்டன் ரோகித், கோலி, பும்ரா என அனைத்து வீரர்களையும் சந்தித்து அவர்களிடம் சில வார்த்தைகள் பேசி ஆசுவாசப்படுத்தினார். ஆறுதலாகவும் பேசி அனைத்து மக்களையும் கவர்ந்தார்.

இந் நிலையில் வீரர்களின் ஓய்வறையில் பிரதமர் மோடி பேசிய போது அங்கிருக்கும் சில இளம் வீரர்களின் நடவடிக்கை, செயல்கள் பற்றிய வீடியோ ஒன்று வெளியாகி பார்ப்போரை அதிர்ச்சிக்கு ஆளாக்கி இருக்கிறது.

ஒவ்வொரு வீரராக கைகுலுக்கி பிரதமர் மோடி நகரும் போது இளம் வீரர் ஸ்ரேயாஸ் அய்யரும் அங்கு இருந்துள்ளார். உடனிந்த ஒரு வீரருக்கு பிரதமர் மோடி ஆறுதல் கூறும் போது, ஸ்ரேயாஸ் அய்யர் ஏதோ ஒரு வார்த்தையை முனகியபடி அங்கிருந்து நகர்ந்துள்ளார்.

மிக குறுகிய விநாடிகளே இருக்கும் அந்த காட்சியில் பிரதமரை அவர் ஆபாசமாக பேசியிருப்பதாக கூறப்படுகிறது. அவரின் வாய் உச்சரிப்புகள், அதன் அசைவுகள், முக பாவனைகள் ஆகியவை ஸ்ரேயாஸ் அய்யர் கெட்ட வார்த்தையை உபயோகப்படுத்தியதாக தெரிகிறது.

இந்த அதிர்ச்சி தரும் வீடியோ வெளியாகி உள்ள தருணத்ல் அந்த வார்த்தை என்ன? அவர் ஏன் இப்படிப்பட்ட தருணத்தில் பயன்படுத்தினார்?

அதுவும் ஒரு பிரதமர், மக்களின், இந்த நாட்டின் ஒட்டுமொத்த அடையாளமான ஒரு சிறந்த நிர்வாகியை இப்படி பேசலாமா? எதிர் கொள்ளலாமா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

உண்மையில் ஸ்ரேயாஸ் அய்யர் என்ன வார்த்தையை பிரயோகித்தார் அல்லது முனகினார் என்பது பற்றி இந்த வீடியோவை ஆதாரமாக கொண்டு இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் விசாரணை நடத்த வேண்டும் என்று நடுநிலையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அந்த சர்ச்சைக்குரிய வீடியோ கீழே இணைக்கப்பட்டு உள்ளது.

Most Popular