குடிச்சு குத்தாட்டம் போட்ட அஜித்…! தொக்காய் ஒரு VIDEO
கேப்டன் விஜயகாந்துக்கு சாவுக்கு வரல… குடிச்சிட்டு குத்தாட்டம் போட நேரம் கிடைக்குதா நடிகர் அஜித்துக்கு… என்று காய்ச்சி எடுத்து வருகின்றனர் நெட்டிசன்ஸ்.
கேப்டன் விஜயகாந்த் மரணத்தால் அதிர்ந்த திரையுலகமே ஒன்று திரண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தியது. நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலர் நேரில் வந்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.
வருவார் என்று எதிர்பார்த்த நடிகர் அஜித் மட்டும் வரவே இல்லை. வெளிநாட்டில் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங்கில் பிசி என்பதால் வரவில்லை என்று பிரேமலதா விஜயகாந்துக்கு ஆறுதல் செய்தி அனுப்பி இருந்தார்.
ஆனால், வெளிநாட்டில் அஜித் என்ன பண்ணி இருக்கார் என்ற வீடியோ இப்போது ரிலீஸ் ஆகி இருக்கிறது. புத்தாண்டை கொண்டாடி இருக்கிறார், ரசிகை ஒருவருடன் குடித்து, கூத்தடித்து குத்தாட்டம் போட்டு இருக்கிறார் என்று அந்த வீடியோவை பார்ப்பவர்கள் பொருமி தள்ளுகின்றனர்.
முழுக்க, முழுக்க வெள்ளை மனிதர் போல.. உடை, உருவம், தலைமுடி, தாடி என அனைத்தும் வெள்ளையாக காட்சி அளித்த அவர், பெண் ஒருவருடன் குத்தாட்டம் போட்டுள்ள வீடியோ அதை பார்ப்பவர்களிடம் கோபத்தை உண்டு பண்ணிருக்கிறது.
கேப்டன் விஜயகாந்த் சாவுக்கு வரல…? ஆளானப்பட்ட ரஜினிகாந்தே ஷூட்டிங்கை கேன்சல் பண்ணிட்டு வந்திருக்காரு, ஆனா நீங்க இப்ப என்ன பண்ணிணீங்கன்னு தெரிஞ்சு போச்சு என்று காய்ச்சி தள்ளி இருக்கின்றனர்.
அஜித் தமிழகம் வரும்போது இதே எதிர்ப்பு இருக்குமா என்பது தெரியவில்லை. வந்தால் அதை விமர்சிக்க தயாராகி வருகின்றனர் நெட்டிசன்ஸ். குத்தாட்ட வீடியோ செய்தியின் கீழ் இணைக்கப்பட்டு உள்ளது.