முன்னாள் அமைச்சர் மணிகண்டன் செய்த ‘காரியம்’…! நடிகை சாந்தினியின் சிசிடிவி ஆதாரம்…!
சென்னை: முன்னாள் அமைச்சர் மணிகண்டன் பற்றிய முக்கிய சிசிடிவி ஆதாரத்தை நடிகை சாந்தினி தரப்பு போலீசில் ஒப்படைத்து உள்ளது.
தமிழகத்தையே கடந்த சில நாட்களாக முன்னாள் அமைச்சர் மணிகண்டன், நடிகை சாந்தினி விவகாரம் பற்றி தான் பரபரப்பாக பேசப்படுகிறது. தம்மை திருமணம் செய்து கொள்வதாக சொன்னார், பாலியல் பலாத்காரம் செய்தார், 5 ஆண்டுகளாக குடும்பம் நடத்தினார் என்று பரபரப்பு புகார்களை அடுக்கி கொண்டே போனார் நடிகை சாந்தினி.
தாம் 3 முறை கருவுற்று மணிகண்டனின் மருத்துவ நண்பர் மூலம் கலைத்ததாகவும் தமது 6 பக்க புகார் மனுவில் அவர் கூறி இருந்தார். 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், மணிகண்டனுடன் நெருக்கமான தொடர்புடையவர்களுடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னாள் அமைச்சர் மணிகண்டன் இப்போது எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை. அவரிடம் விசாரணை நடத்தும் முடிவில் போலீசார் உள்ளனர். சாந்தினி கூறுவது அனைத்தும் பொய் என்று மணிகண்டன் மனைவி ராமநாதபுரம் எஸ்பியிடம் மனு கொடுக்க அது அடையாறு போலீசுக்கு அனுப்பட்டு உள்ளது.
அதே நேரத்தில் ஒரு பரபரப்பான சிசிடிவி ஆதாரத்தை நடிகை சாந்தினி தரப்பு போலீசில் ஒப்படைத்துள்ளது. அதாவது முன்னாள் அமைச்சர் மணிகண்டன், சைதாப்பேட்டையில் உள்ள சாந்தினியின் வழக்கறிஞரை தனியாக வந்து சந்தித்துள்ளார் என்பதற்கான ஆதாரம்தான் அது.
வழக்கறிஞர் அலுவலகத்தின் வெளியே மணிகண்டன் மாஸ்க் அணிந்தபடி நடந்து செல்லும் காட்சிகள் அதில் காணப்படுகின்றன. அவர் உண்மையில் மணிகண்டன் தானா என்பது கூறமுடியாது. ஆனால் அது மணிகண்டன் தான் போலீசில் சாந்தினி தரப்பு அழுத்தமாக கூறி இருக்கிறது. போலீசார் விரிவான விசாரணை நடத்தினால் மட்டுமே முழு விவரமும் தெரிய வரும். ஆனாலும், சிசிடிவி காட்சிகள் இந்த வழக்கில் பரபர திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளன.