போலீஸ் தேர்வு எழுதும் பிரபல கவர்ச்சி நடிகை…? ஹால் டிக்கெட் கூத்து
பிரபல கவர்ச்சி நடிகையான சன்னி லியோன் உத்தரப்பிரதேச காவலர் எழுத்து தேர்வில் பங்கேற்பதற்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டு உள்ள சம்பவம் ஷாக்கை தந்திருக்கிறது.
சன்னி லியோன்… இவரை தெரியாத இளசுகள் இல்லை. கவர்ச்சிக்கு பெயர் போனவர்… அதுவும் எக்கச்செக்க கவர்ச்சிக்கு சொந்தக்காரர். அண்மையில் கேரளாவில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அவரை காண லட்சக்கணக்கான இளைஞர்கள் திரண்டு அதகளம் பண்ணினர்.
இப்போது லேட்டஸ்ட்டாக அவரை பற்றிய மற்றொரு பேச்சு. அவர் உத்தரப்பிரதேச காவலர் தேர்வில் பங்கேற்கிறார் என்பதுதான். அதாவது அந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட்டில் சன்னி லியோன் போட்டோ இடம்பெற்று இருக்கிறது.
பதிவு எண், முகவரி, அவர் எங்கு தேர்வு எழுத வேண்டும் என்ற விவரங்களும் அந்த ஹால் டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டு உள்ளன. ஹால் டிக்கெட்டில் கூட அவரின் அதே கிளுகிளு போட்டோ தான் ஒட்டப்பட்டு இருக்கிறது.
கவனக்குறைவு என்பது இதுபோன்ற தேர்வு ஏற்பாடுகளில் இருக்கவே கூடாது… ஆனால் அதெல்லாம் ஜூஜூபி என்று நிரூபித்து இருக்கிறது உத்தரப்பிரதேச மாநிலம்….!