ரேஷன் பொருட்களை பெறுவதில் புதிய முறை…! தமிழக அரசு அறிவிப்பு
சென்னை: வயது முதிர்ந்த நபர்கள் ரேஷன் கடைகளுக்கு செல்ல முடியாமல் கடிதம் ஒன்றை கொடுத்து வேறு நபர்கள் மூலமாக ரேஷன் பொருட்களை பெறலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் பொதுமக்களுக்கு சகாய விலையில், இலவசமாக பொருட்கள் ரேஷன் மூலம் அளிக்கப்பட்டு வருகின்றன. அரசு நலத்திட்ட உதவுகள் பேரிடர் கால நிதிஉதவி உள்ளிட்ட பல சேவைகளும் ரேஷன் கார்டு மூலம் பெற்று கொள்ளலாம்.
மக்களின் அடிப்படையான அடையாளமான ரேஷன் கடைகளில் முதியவர்கள் பலர் ரேஷன் வாங்குவதில் தொடர்ந்து சிரமங்கள் இருப்பதாக கூறப்பட்டது. இது குறித்து தமிழக அரசின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டது.
இந்நிலையில், வயதானவர்கள் ரேஷன் கடைகளுக்கு செல்ல முடியாமல் கடிதம் ஒன்றை கொடுத்து வேறு நபர்கள் மூலமாக ரேஷன் பொருட்களை பெறலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்தின் போது காங்கிரஸ் எம்எல்ஏ பிரின்ஸ் எழுப்பிய கேள்வி ஒன்றில் இந்த விவரத்தை தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கூறி உள்ளதாவது: தமிழகத்தில் பயனாளிகளுக்கு ரேஷன் மூலம் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. குடும்ப அட்டையில் 50 வயதை கடந்தவர்கள் ரேஷன் கடைகளுக்கு செல்ல முடியாமல் இருந்தால் அவர் ஒரு கடிதத்தை வேறு ஒரு நபர் மூலம் கொடுத்துவிட்டு ரேஷன் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம்.
இப்படி ஒரு சலுகையை பெற சம்பந்தப்பட்டவர்கள் ரேஷன் கடை அதிகாரிகளிடம் உரிய முறையில் பர்மிஷன் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.