Sunday, May 04 12:20 pm

Breaking News

Trending News :

no image

தூக்கில் தொங்கிய திமுக விஐபி மனைவி…! பிறந்த நாளில் சோகம்….!


சென்னை: திமுகவின் தமிழன் பிரசன்னாவின் மனைவி தமது பிறந்த நாளில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல வழக்கறிஞராகவும், திமுக செய்தி தொடர்பு இணை செயலாளராகவும் இருப்பவர் பிரசன்னா. சிறந்த பேச்சாளரான இவர் சென்னை எருக்கஞ்சேரி இந்திரா நகர் மேற்கு பகுதியில் வசித்து வருகிறார்.

பிரசன்னாவின் மனைவி நதியா. அவர்களுக்கு 3 குழந்தைகள் இருக்கின்றனர். மனைவியின் வீட்டில் மாமனார் மற்றும் குழந்தைகளுடன் பிரசன்னா வசித்து வருகிறார். இன்று வீட்டில் நதியாவின் அறை கதவு திறக்கப்படாததால் அவரது கணவர் அறை கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார்.

அப்போது நதியா மின் விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட, அவரை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் நதியா இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். பிரசன்னாவின் புகாரின் பேரில் கொடுங்கையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதல் கட்ட விசாரணையில் பிரசன்னா கூறியதாவது: மனைவி நதியாவின் பிறந்த நாள் இன்று என்பதால் அவர் பிரம்மாண்டமாக கொண்டாட வேண்டும் என்று விரும்பினார். ஆனால் கொரோனா காலம் என்பதால் வேண்டாம் என்று தடுத்தேன்.

அதன் காரணமாக, நதியாவுக்கு கோபம் வந்து என்னிடம் சண்டை போட்டுவிட்டு சென்றார். மனவிரக்தியிலும் இருந்தார். காலை எழுந்து பார்த்த போது அவரது அறையில் அவர் தூக்கில் தற்கொலை செய்திருப்பதை பார்த்தேன் என்று கூறி இருக்கிறார். இந்த சம்பவம் குறித்து நதியாவின் தந்தையிடமும், உறவினர்களிடமும் விசாரணை நடத்த திட்டமிட்டு உள்ளனர்.

Most Popular