55 ரூபாய் வைத்துள்ளீர்களா..? மாதம் 3000 ரூபாய் பென்ஷன் வாங்கலாம்…! எப்படி…?
டெல்லி: 55 ரூபாய் இருந்தால் மாதம் 300 ரூபாய் பென்ஷனை மத்திய அரசின் பிஎம் கிசான் திட்டத்தில் பெறலாம்.
இவ்வுலகில் உள்ள மனிதர்களில் பென்ஷன் என்பதை ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு மட்டும் தான் கிடைக்கும் என்று பலரும் நினைப்பதுண்டு. இன்னமும் பல்வேறு துறைகளிலும் மக்கள் அப்படித்தான் நினைத்து வருகின்றனர்.
ஆனால் விவசாயிகளும் மாதம் தோறும் பென்ஷன் பெற்றுக் கொள்ளலாம். அப்படிப்பட்ட ஒரு திட்டம் மத்திய அரசின் கீழ் உள்ளது. பிரதான் மந்திரி கிசான் மந்தன் யோஜனா என்பது தான் அந்த திட்டத்தின் பெயராகும்.
இந்த திட்டத்தில் சேரும் விவசாயி ஒருவருக்கு 2 ஹெக்டேருக்கு குறைவான விவசாய நிலம் இருக்க வேண்டும். இந்த திட்டத்தின் ஒரு சிறப்பு அம்சம் சிறிய முதலீடுதான்.
அதன் எதிரொலியாக மாதம் தோறும் 3000 ரூபாய் பென்ஷன் பெற்றுக் கொள்ளலாம். 18 வயது கடந்த பின்னர் இந்த திட்டத்தில் இணைந்தால் மாதம் பயனாளி 55 ரூபாய் வழங்க வேண்டும். 30 வயது ஆகிவிட்டது என்றால் நீங்கள் மாதம் தோறும் 1000 ரூபாய் செலுத்த வேண்டும்.
குறிப்பிட்ட காலத்தில் முதலீட்டு தவணை முடிந்த பின்னர் மாதம்தோறும் 3000 ரூபாய் பென்ஷன் பெற்றுக் கொள்ளலாம். வயது வரம்பு 18 முதல் 40 வயது வரை இருக்க வேண்டும். 60 வயது வரை என்றால் 55 ரூபாய் முதல் 200 ரூபாய் பிரிமயம் மாதத்துக்கு கட்ட வேண்டும்.
விருப்பம் உள்ளவர் இந்த திட்டத்தில் சேர வேண்டும் என்றால் வழக்கம் போல் ஆதார் கார்டு கட்டாயமாகும். வருமான சான்றிதழ், நிலத்தின் ஆவணம், வங்கி பாஸ் புத்தகம், செல்போன் நம்பர், பாஸ்போர்ட் போட்டோ தேவைப்படும். மேற்கண்ட அனைத்து ஆவணங்களையும் அருகில் உள்ள பொது சேவை மையத்துக்கு எடுத்துச் சென்று திட்டத்தில் இணைந்து கொள்ளலாம்.