பொதுக்குழு நடத்தலாம் என்று சுப்ரீம்கோர்ட் சொல்லல…! பாயிண்ட்டை பிடித்த வைத்திலிங்கம்
சென்னை: பொதுக்குழு நடத்தலாம் என்று உச்ச நீதிமன்றம் சொல்லவில்லை என்று ஓபிஎஸ் ஆதரவாளரும், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளருமான வைத்திலிங்கம் கூறி உள்ளார்.
அதிமுகவில் யார் பொதுச் செயலாளர் என்ற ரேஸ், தினசரி பல்வேறு திருப்பங்களுடன் சென்று கொண்டிருக்கிறது. பொதுக்குழுவுக்கு தடை ஓபிஎஸ் செய்துள்ள மனு மீதான விசாரணை இன்று ஐகோர்ட்டில் நடந்தது. அப்போது உடனே விசாரித்து உத்தரவிட வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்பு வாதிட்டது. ஆனால் அதை ஏற்க மறுத்த கோர்ட், வழக்கை நாளைக்கு தள்ளி வைத்திருக்கிறது.
இந்த சூழலில் ஓபிஎஸ் ஆதரவாளர், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
கோர்ட் தீர்ப்பை என்றுமே நாங்கள் மதிப்போம். இந்த விவகாரத்தை ஐகோர்ட்டுக்கு கொண்டு போகலாம் என்றுதான் கூறி இருக்கிறார்கள். பொதுக்குழு நடத்தலாம் என்று சுப்ரீம்கோர்ட் சொல்லவில்லை. ஆகவே தான் பொதுக்குழுவை நடத்தக்கூடாது என்று ஐகோர்ட்டை நாடியிருக்கிறோம்.
கொடநாடு சம்பவத்தில் உண்மை குற்றவாளிளை கண்டுபிடித்து நிறுத்த வேண்டும் என்பது தான் அதிமுக தொண்டனின் எண்ணம் என்று கூறி இருக்கிறார்.