பாஜக முக்கிய தலைவருக்கு திடீர் உடல்நலக்குறைவு…! தொண்டர்கள் ஷாக்
பென்னாகரம்: பாஜக மாநில துணைத்தலைவர் கேபி ராமலிங்கம் திடீர் உடல்நலக்குறைவால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்ப்டடார்.
பாரதமாதா நினைவாலய பூட்டை உடைத்ததாக பாஜக மாநில துணை தலைவர் கேபி ராமலிங்கம் நேற்று கைது செய்யப்பட்டார். ராசிபுரத்தில் உள்ள அவரது வீட்டில் தருமபுரி போலிசார் கைது செய்தனர்.
இந் நிலையில் நேற்றிரவு கேபி ராமலிங்கத்துக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவர் பென்னாகரத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
பின்னர் அங்கிருந்து தருமபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு போகப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு அனைத்து மருத்துவ பரிசோதனைகளும் நடத்தப்பட்டன. அங்கிருந்து சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு உள்ளார்.